மேலும் அறிய

வேலூர் , ராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது

ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து, 48 ஆயிரத்து, 898 பேர், பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து, 68 ஆயிரத்து 6 பேர், மூன்றாம் பாலினத்தவர் 80 ஆக மொத்தம் 7 லட்சத்து, 16 ஆயிரத்து, 984 வாக்காளர்கள் உள்ளனர்.

வேலூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஒருங்கிணைத்த வேலூர் மாவட்டத்தின் மற்றுமொரு அங்கமான திருப்பத்தூர் மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை .
 
தமிழ் நாட்டில்  புதியதாக  உருவாக்கப்பட்ட  9 மாவட்டங்களில் ஊரக தேர்தலை நடத்த அறிவிப்பு விரைவில் தமிழ் நாடு அரசு தேர்தல் துறையால் வெளியாகவுள்ளது . அதற்காக முதற்கட்டமாக இன்று வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர், காட்பாடி ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிக்கான  வார்டு வாரியாக, புகைப்படத்துடன் கூடிய வரைவு  வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று வேலூர்  மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வெளியிட்டார்.

வேலூர் , ராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது
 
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில்  வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சிகள், 7 ஊராட்சி ஒன்றியங்கள், 2079 கிராம ஊராட்சி வார்டுகளும், 7 ஊராட்சி ஒன்றியங்களில் 138 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 14 மாவட்ட ஊராட்சி வார்டுகள் பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. சட்டமன்றத் தொகுதிவாரியான வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, மறுசீரமைக்கப்பட்ட வார்டு வாரியான ஆண், பெண் வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

வேலூர் , ராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது
 
மொத்தம் வேலூர் மாவட்டத்தில் 1331 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து, 48 ஆயிரத்து, 898 பேர், பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து, 68 ஆயிரத்து 6 பேர், மூன்றாம் பாலினத்தவர் 80 ஆக மொத்தம் 7 லட்சத்து, 16 ஆயிரத்து, 984 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல் மக்களின் பார்வைக்காக வட்டார வளர்ச்சி அலுவலகம், தாலுக்கா அலுவலகம் ஆகிய இடங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்று தெரிவித்தார். இது போலவே இன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் இன்று  வெளியிட்டார்  அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 288 கிராம ஊராட்சிகளில் மொத்தம் 1410 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்.

வேலூர் , ராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது
 
இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் அரக்கோணம், ஆற்காடு, காவேரிப்பாக்கம் , நெமிலி . சோளிங்கர் , திமிறி மற்றும் வாலாஜா ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 701  ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 40 ஆயிரத்து 498 பெண் வாக்காளர்களும் மற்றும் 38 இதர பாலினத்தவர் என மொத்தம் 6 லட்சத்து 67 ஆயிரத்து 237 வாக்காளர்கள் , வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வேலூர் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ள  நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget