மேலும் அறிய
Advertisement
தருமபுரி: நிதி முறைகேடு செய்த தலைவர் - வாா்டு உறுப்பினா்கள் போராட்டம்
ஒரு சில பணிகள் கிராமப் பகுதிகள் செய்யப்படாமலே பணம் எடுக்கப்பட்டுள்ளது என ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
தருமபுரி அருகே பணிகள் செய்யப்படாமலேயே நிதி முறைகேடு செய்த தலைவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திப்பிரெட்டிஅள்ளி ஊரட்சி மன்ற அலுவலகம் முன்பு வாா்டு உறுப்பினா்கள் போராட்டம் நடத்தினர்.
தருமபுரி மாவட்டம் திப்பிரெட்டிஹள்ளி ஊராட்சியில் மணிபுரம், குக்கல்மலை, பசுவாபுரம், பத்திரெட்டிஹள்ளி, ராமதாஸ் நகர் உள்ளிட்ட 26 கிராமங்கள் உள்ளன. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி மன்ற தலைவராக சித்ரா இருந்து வருகிறார். இதில் 12 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கிராம ஊராட்சியில் தலைவர் சித்ரா பல்வேறு பணிகளை செய்யாமலே முறைகேடு செய்வதாக கூறி, பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிராம சபை கூட்டத்திலும் புகாா் அளித்து கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொள்ளததால் கிராமசபை கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முனிரத்தினம் தலைமையில் ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். இதில் ஊராட்சியில் திட்டப் பணிகள் பல செய்யப்படாமல் ஊராட்சி நிதி முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர் தெருவிற்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. ஒரு சில பணிகள் கிராமப் பகுதிகள் செய்யப்படாமலே பணம் எடுக்கப்பட்டுள்ளது என ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். பல கிராமங்களுக்கு எவ்வித திட்ட பணிகளும் செய்யப்படாமல் தன்னிச்சையாக ஊராட்சி மன்ற தலைவர் செய்வதாகவும் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட உயர் அதிகாரி இடத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதே போன்று தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுபவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராமமக்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இந்த புகார் குறித்து விசாரணை செய்ய இரண்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் விசாரணை ஒரு தலைபட்சமாக, இருப்பதாக கூறி, வெளிநடப்பு செய்தனர். இதனால் இந்த கூட்டத்தில், சலசலப்பு விவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குள் கமிஷன் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக பொதுமக்கள் பிரச்னை கண்டு கொள்ளவில்லை. ஆகவே பொதுமக்கள் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இந்த மன்ற களைத்து விட்டு, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் ஊராட்சி தலைவரை கண்டித்து வாா்டு உறுப்பினா்கள் தா்ணாவில் ஈடுபட்டனா்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion