ஜூன் முதல் வாரத்தில் கொரோனா 4ஆம் அலை எச்சரிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா நான்காவது அலை குறித்த கேள்விக்கு கான்பூர் ஐஐடி ஜூன் மாதத்தில் 4வது அலைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணகுருக்கை கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 9 மக்கள் நல்வாழ்வு மையங்களை திறந்து வைத்தார். இதில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என் அண்ணாதுரை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, சரவணன், ஜோதி சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,
தமிழகத்தில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் பொழுது தமிழகத்தில் மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் பொருட்டு முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடப் பட்டது. இதில் அறிவிப்பு எண் 8 பொருத்தவரையில் ஊரக பகுதியில் உள்ள 2400 சுகாதார நிலையங்கள் 35 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நல்வாழ்வு மையங்களாக மாற்றப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதிலும் 2400 துணை சுகாதார நிலையங்களும் நல்வாழ்வு மையங்களாக மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 முதல் 20 பணிகள் முடிவுற்று திறந்து வைக்கப்படும் நிலையில் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரையில் கண்ணகுருக்கை, கரியமங்கலம், பிஞ்சூர், ஆலாப்புத்தூர், கொட்டாவூர், அரியபாடி, வெட்டியந்தொழுவம், சங்கீதவாடி கிராமங்களில் தலா 20 லட்சம் மதிப்பீட்டில் 9 நல்வாழ்வு மையங்கள் திறந்து வைக்கப் பட்டுள்ளதாகவும், போளூர் சந்தவாசலையமும் துரிஞ்சாபுரம் ஆனந்தல் பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என தல 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி துரிஞ்சாபுரம் கீழ்பெண்ணாத்தூர் ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவிற்கான புதிய கட்டிடங்கள் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளதாகவும் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 4 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மதிப்பீட்டிலான கட்டிடங்கள் திறந்து வைத்தும் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றதாகவும்,
இந்தியா முழுவதும் தற்காலிக பணியாளர்கள் நியமன நடைமுறை உள்ளதாகவும் இரண்டாவது அலை முடிந்தவுடன் கேரளாவில் ஒரே கையெழுத்தில் 20 ஆயிரம் பணியாளர்களை பணியில் இருந்து நீக்கிய தாகவும் ஆனால் தமிழக முதல்வர் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் பணியாற்றி உள்ளார்கள் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மார்ச் 31 வரை பணி நீடிப்பு செய்ததாகவும் குறிப்பாக மக்களை தேடி மருத்துவத்திற்கு 7428 புதிய பணியாளர்களாக நியமிக்க வேண்டிய நிலையில் பேரிடர் காலங்களில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு 100 மதிப்பெண்களில் 20 மதிப்பெண்களை கூடுதல் மதிப்பெண்களாக கொடுத்து 80 சதவீத நபர்கள் மீண்டும் பணியில் இணைந்து உள்ளதாகவும் அதேபோன்று ஏதாவது ஒருவகையில் அவர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு கிடைத்தால் அவர்களை இணைத்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.பணி கிடைக்காதவர்களுக்கு மெரிட் மதிப்பெண்கள் அல்லது அடையாள அட்டை போன்று வழங்கப்பட்டு எதிர்காலத்தில் இந்தத் துறையில் காலிப் பணியிடம் ஏற்படும் பொழுது அவர்களை பயன்படுத்திக் கொள்வோம் என தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா நான்காவது அலை குறித்த கேள்விக்கு கான்பூர் ஐஐடி ஜூன் மாதத்தில் 4வது அலைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் சீனாவில் நேற்று ஒரே நாளில் மீண்டும் 2000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், சிங்கப்பூரில் 12 ஆயிரம் பேருக்கும், மலேசியாவில் 20 ஆயிரம் பேருக்கும், கேரளாவில் 1088 பேருக்கும் கொரோனா தொற்று பாதித் உள்ளதாகவும் நம்மை சுற்றிலும் கொரோனா என்ற ஆபத்து நெருப்பு எரிந்து கொண்டே இருப்பதாகவும் நாம் இன்னும் ஓரிரு மாத காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது அவசியம் என தெரிவித்தார். இந்தியாவிலேயே எந்த மாநிலங்களிலும் மாநில அரசு மருத்துவமனையில் இல்லாத வகையில் கேன்சருக்கான சிகிச்சை அளிக்கக்கூடிய ரோபோட்டிக் எந்திரம் இல்லை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள எய்ம்ஸ் ஜிப்மர் போன்ற மருத்துவமனையில் மட்டுமே உள்ளது.தமிழகத்தில் அப்போலோ போன்ற தனியார் மருத்துவமனை இந்த இயந்திரம் உள்ளது.இந்தியா முழுவதும் 70 இடங்கள் மட்டுமே இந்த ரோபோட்டிக் எந்திரம் உள்ளது. முதல் முறையாக மாநில அரசு நிர்வகிக்க கூடிய மருத்துவமனைகளில் 38.50லட்சம் மதிப்பில் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் ரோபோட்டிக் கேன்சர் என்ற இயந்திரத்தை வாங்கி பொருத்தி உள்ளது இதனை தமிழக முதல்வர் மக்கள் பயன்பாட்டிற்கு நாளை கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார்.