அரசு பேருந்தை வழிமறித்து ரகளை செய்த குடிமகன்... தாக்குதல் நடத்தியதில் ஓட்டுநர் உள்ளிட்டோர் காயம்!
‛தாக்குதலில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதனால் பயந்து போன அந்த போதை ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடினார்’
![அரசு பேருந்தை வழிமறித்து ரகளை செய்த குடிமகன்... தாக்குதல் நடத்தியதில் ஓட்டுநர் உள்ளிட்டோர் காயம்! Arani near, intoxicated Man Attack government bus அரசு பேருந்தை வழிமறித்து ரகளை செய்த குடிமகன்... தாக்குதல் நடத்தியதில் ஓட்டுநர் உள்ளிட்டோர் காயம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/24/55c0661e47431ee19fdad2f64b09aac1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி பழைய பேருந்து நிலையத்திலிருந்து , வழித்தடம் 21/A என்ற அரசு பேருந்து எஸ்.யூ., வனம் என்ற கிராமத்திற்கு சென்றுள்ளது. அந்த பேருந்தை சிறுமூர் கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் வெங்கடேசன் மற்றும் ஒண்டிகுடிசை கிராமத்தை சேர்ந்த நடத்துனர் ஞானப்பிரகாசம் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த பேருந்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். இந்நிலையில் சிறுமூர் கிராம பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பாது அவ்வழியாக சாலையின் குறுக்கே அதே கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவர் குடிபோதையில் நின்று கொண்டு, அவ்வழியாக செல்லக்கூடிய வானங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக எதிரே வந்த அரசு பேருந்தை குடிப்போதையில் இருந்த சங்கர் வழிமறித்துள்ளார். பின்னர் ஓட்டுனர் வெங்கடேசன் பேருந்துக்கு வழிவிடக்கோரி ஹாரன் அடித்துள்ளார். அப்போதும் குடிபோதையில் தல்லாடிய சங்கர், ஓட்டுனரிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். இதனை அறிந்த நடத்துனர் ஞானப்பிரகாசம் பேருந்தில் இருந்து கீழே இறங்கி சங்கரிடம், ‛ நீ தகராறு செய்யவேண்டாம்.. நீ சற்று ஒதுங்கினால் நாங்கள் பேருந்தை எடுத்துச் சென்று விடுவோம்,’ என்று கூறியுள்ளார். ஆனால் குடிப்போதையில் இருந்த சங்கர், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரையும் ஆபாசமாகத் பேசியுள்ளார். மேலும் கீழே இருந்த கல்லை எடுத்து இருவர் மீதும் தாக்கியுள்ளார். மேலும் பேருந்து மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதனால் பயந்து போன அந்த போதை ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடினார்.
அதனைத்தொடர்ந்து ஓட்டுநர் வெங்கடேசன், ஆரணி காவல் நிலையத்திற்கு சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளார். இந்த தகவல் அறிந்த ஆரணி கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி, தப்பி ஓடிய சங்கர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர். குடிபோதையில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைத்தும், ஓட்டுனர் மற்றும் நடத்துனரை கல்லால் தாக்கிய குடிமகளின் செயல், அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)