மேலும் அறிய

வரதட்சணை கொடுமையால் திருமணமான 8 மாதங்களில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

’’விஜயகுமாரின் தாயும் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து வேறு ஒரு திருமணத்தை தனது மகனுக்கு செய்து வைக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது’’

திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியை சேர்ந்தவர் காமராஜர், ராஜலட்சுமி தம்பதி இவரது மகள் சினேகா (25) பட்டதாரி ஆவார். இவர் புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த அறிவழகன்,  சகாயராணி தம்பதியின் மகன் விஜயகுமார் (30) தனியார் வங்கியில் வேலை பார்த்து  வருகிறார்.  விஜயகுமார் மற்றும் சினேகா இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்து இருவரும் தாங்கள் காதல் விவகாரத்தை தங்கள் வீடுகளில் தெரிவித்தனர். தொடக்கத்தில் இரு வீட்டிலிலும் இதற்கு எதிர்ப்புகள் இருந்த நிலையில் சில மாதங்கள் கடந்த பிறகு இருவீட்டார்  சம்மதத்துடன் கடந்த 8 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பெண் வீட்டார் 18 பவுன் நகையும், ஒரு லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களையும் வழங்கியுள்ளனர். இந்நிலையில் விஜயகுமார் மற்றும் சினேகா தம்பதியினர் திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் தெருவில்   இருவரும் வசித்துவந்தனர். 

வரதட்சணை கொடுமையால் திருமணமான 8 மாதங்களில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையில் சில மாதங்கள் கடந்த பிறகு இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. நாட்கள் கடந்த பிறகு பிரச்சனையும் பெரிதாக ஆனது. தினமும் இரவில் விஜயகுமார், சினேகாவிடம் தொடர் வாக்குவாதம் செய்து பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் சினேகா அவரது அப்பா வீட்டிற்கு சென்று விடுவதாக கூறபடுகிறது. மேலும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் விஜயகுமார் வீட்டில் அவரது பெற்றோர்கள் சினேகாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து திருமணம் நடந்தி சில மாதங்களில் விஜயகுமார் தனது மனைவி சினேகாவிடம் வரதட்சணை நகை குறைவாக உள்ளதாகவும் புதியதாக தொழில் தொடங்குவதற்காக நகையும், பணமும்  கேட்டு அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  மேலும் விஜயகுமாரின் தாயும் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து வேறு ஒரு திருமணத்தை தனது மகனுக்கு செய்து வைக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வரதட்சணை கொடுமையால் திருமணமான 8 மாதங்களில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையில் இன்று காலை கணவர் விஜயகுமார் மனைவி சினேகாவிடம் வீடியோ கால் மூலம் பேசி மீண்டும் நகை கேட்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சினேகா இன்று காலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
Embed widget