மேலும் அறிய

“கஷ்டப்பட்டு கல்லூரிக்கு அனுப்புகின்றனர்; பெற்றோர் சொல்வதை கேளுங்கள்”- மாணவிகளுக்கு டி.ஜி.பி அறிவுரை

பெண்கள் உயர் இடத்தை பெற போராட வேண்டும் என்று ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி நிகழ்ச்சியில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் `நான் முதல்வன்' என்ற தலைப்பில் கணினி குற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் கோ. மீனா தலைமை தாங்கினார். கல்லூரி தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குனர் எஸ்.அபர்ணா, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராதிகா வரவேற்றார். இதில் தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
 
அப்போது, அவர் கூறியதாவது,,,  கல்லூரி படிப்பை பெண்கள் தொடர்வதற்கு சவாலான காலகட்டங்கள் இருந்தன. இதற்கான விதைகள் கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை அப்போதே அறிஞர்கள் உணர்ந்திருந்தனர். அதனால்தான் தொடர்ந்து போராடினர். இதன் அடிப்படையிலேயே பெண் கல்விக்கு முக்கியத்துவம் கிடைத்தது. பெற்றோர்கள் உங்களை கஷ்டப்பட்டு கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் தினமும் புத்தகத்தை எடுத்து படித்தாலே போதும், அதை கண்டு உங்கள் பெற்றோர்கள் வியந்து பாராட்டுவார்கள். உங்கள் குடும்பம் சந்தோஷப்படும். ஒவ்வொரு மனிதன் பிறக்கும் போதும், அவர்களுக்குள் ஒவ்வொரு சிந்தனையும், ஒவ்வொரு புதிய சக்தியும், புதிய ஆற்றலும் உருவாகிறது.
 
“கஷ்டப்பட்டு கல்லூரிக்கு அனுப்புகின்றனர்; பெற்றோர் சொல்வதை கேளுங்கள்”- மாணவிகளுக்கு டி.ஜி.பி அறிவுரை
 
மேலும் இந்த மிகப்பெரிய ஆற்றல் என்ன என்பதை மாணவ சக்தியாகிய நீங்களே உங்களுக்குள் தேடி கண்டுபிடித்து அதை வெளிக் கொண்டு வந்து இந்த நாட்டுக்கும், சமூகத்திற்கும் பெரும் முன்னேற்ற பாதையை எடுத்துச் செல்ல வேண்டும். மிகப்பெரிய பதவி சவுகரியம் எல்லாம் எப்போதும் உங்களை தேடி இலவசமாக வந்தாலும் அது உங்களுக்கு இறுதி வரையில் கூட வராது. நீங்கதான் போராடி உயர் இடத்தை பெற வேண்டும். வாழ்க்கையில் சிக்கலான பிரச்சினைகளை கடக்கும்போது மனநிலையில் தடுமாற்றம் ஏற்படும். எத்தனை தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும் நமது மனநிலையை நம்மால் மாற்ற முயலும், வெற்றி இலக்கை நோக்கி நம்மால் முன்னேற முடியும். கல்லூரி பருவம் வாழ்க்கையில் போர்க்களம் போன்றது. அதில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் தமிழாய்வுத்துறை தலைவர் ஸ்ரீதேவி நன்றி கூறினார். இதில் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Embed widget