மேலும் அறிய

பாராளுமன்றத் தேர்தல் முன்னிட்டு திருச்சியில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் - காவல் ஆணையர் உத்தரவு

திருச்சி மாநகரில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும் - திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி உத்தரவு..

திருச்சி மாநகர ஆயுதப்படை திருமணமண்டபத்தில் பிப்ரவரி - 2024 மாதத்திற்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் S.செல்வகுமார், (தெற்கு), V.அன்பு, (வடக்கு), காவல் கூடுதல் துணை ஆணையர் (ஆயுதப்படை), காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர்  பேசுகையில்..

பாராளுமன்ற தேர்தல்- 2024 பாதுகாப்பு ஏற்பாடுகள் பணிகளை குறித்து கேட்டறிந்தார்கள். மேலும் தேர்தல் நேரத்தில் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பற்றியும் ஆய்வு செய்தும், முக்கிய குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் மரண வழக்குகள் பற்றியும் ஆய்வு செய்தும், விபத்து வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினார்.

பாராளுமன்றத் தேர்தல் முன்னிட்டு திருச்சியில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் -  காவல் ஆணையர் உத்தரவு

போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும்... 

குறிப்பாக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை, போதைப்பொருள் விறபனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், போதை மற்றும் புகையிலை பொருள்கள் விற்பனை ஏதும் நடைபெற வண்ணம் தீவிரமாக கண்காணிப்பு வேண்டும். மேலும் சரித்திரபதிவேடு குற்றவாளிகள் மற்றும் கெட்டநடத்தைக்காரர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் அவர்கள் பொதுமக்களை அச்சுறுத்துவிடுமாக குற்ற சம்பவங்களை ஈடுபட்டால் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் காவல் நிலையங்களில் பதிவாகி உள்ள திருட்டு வழக்குளை துரிதமாக புலன்விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து வழக்கு தொடர்பான  சொத்துக்களை மீட்க வேண்டும் என்றார். 

பாராளுமன்றத் தேர்தல் முன்னிட்டு திருச்சியில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் -  காவல் ஆணையர் உத்தரவு

திருச்சியில் CCTV கேமராக்களை பாரமரிக்க வேண்டும்..

திருச்சி மாநகரம் முழுவதும் பொருந்தப்பட்டுள்ள சுமார் CCTV கேமராக்களை முறையாக பாரமரிக்க வேண்டும். மேலும் பழுதான CCTV கேமராக்களை பழுதுபார்த்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கூறினார். 

மேலும் முதல்வரின் முகவரியில் பெறப்பட்ட புகார்கள், காவல்துறை இயக்குநர் அலுவலக புகார் மனுக்கள் மற்றும் காவல்நிலையத்திற்கு நேரடியாக புகார் அளிக்கவரும் பொதுமக்களிடம் கணிவாக நடந்து கொள்ள வேண்டும், அவர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் முறையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்ய முகாத்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யவும், இல்லையேல் புகார் மனுவிற்கு மனு ரசீது வழங்கி விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் திருச்சி மாநகரில் குற்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் காவல்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். குறிப்பாக குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை முழுமையாக தடுத்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  மேலும் போதை பொருள், லாட்டரி சீட் விற்பனை, சாலை பாதுகாப்பு விதிமுறைகள், குறித்து தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Israel Attack Gaza: மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...
மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...
அதிகரிக்கும் வெயில்.. மக்களே கட்டாயம் இத பண்ணுங்க - சேலம் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை என்ன?
அதிகரிக்கும் வெயில்.. மக்களே கட்டாயம் இத பண்ணுங்க - சேலம் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை என்ன?
Embed widget