மேலும் அறிய

அடிப்படை வசதிகள், சுகாதாரமின்றி இருக்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதி, சுகாதாரமின்றி தவிக்கும் பொதுமக்கள், மாநகராட்சி அலட்சியபோக்கு பொதுமக்கள் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் மையப்பகுதியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு முக்கிய போக்குவரத்து வழித்தடமாக திருச்சி உள்ளது. வெளியூரில் தங்கி பணியாற்றும் பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும்போது, திருச்சிக்கு வந்தே அடுத்த பேருந்து மாறி சென்று வருகிறார்கள். திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய இரு பேருந்து நிலையங்களும் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்புடன் காணப்படும். இதில் சத்திரம் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் திருச்சியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையம் பழமையான பேருந்து நிலையமாகும். இங்கிருந்து சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், நெல்லை, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன. மேலும், இங்கிருந்து நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் திருச்சிக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் இருமடங்கு அதிகரிக்கிறது.


அடிப்படை வசதிகள், சுகாதாரமின்றி இருக்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம்

இதன் காரணமாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் போதுமான இடவசதி இல்லாததாலேயே திருச்சி மக்களின் 25 ஆண்டு கால கனவுத்திட்டமான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணி பஞ்சப்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அங்குள்ள கழிப்பிடத்தில் துர்நாற்றம் வீசுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பேருந்து நிலையத்துக்குள் உள்ள சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. பள்ளமான இடங்களில் மழைநீரும் தேங்கி கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் எச்சில் துப்பிய கரையுடன் தூய்மையற்ற நிலையில் உள்ளது. இது தவிர, பேருந்துகளும் வரன்முறையின்றி தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இரவுநேரத்தில் சென்னை உள்பட ஒரு சில ஊர்களுக்கு பேருந்து போக்குவரத்து முற்றிலும் குறைக்கப்பட்டு விடுவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


அடிப்படை வசதிகள், சுகாதாரமின்றி இருக்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம்

இதுகுறித்து மதுரையை சேர்ந்த சந்திரன் என்ற பயணி கூறும்போது, நான் வேலை நிமித்தமாக அடிக்கடி திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்வேன். இங்கு இலவச கழிப்பிடம் என எழுதி வைத்துவிட்டு கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆங்காங்கே துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார மற்ற சூழல் உள்ளது. இதை சரி செய்தால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், பஸ் நிலையத்தை சுற்றி ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகளும் உள்ளன. இதனாலும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது என்றார்.


அடிப்படை வசதிகள், சுகாதாரமின்றி இருக்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம்

திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஷெல்லி தினேஷ் கூறும்போது, மத்திய பஸ்நிலைய நடைமேடைகளில் கான்கிரீட் கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு அந்த குப்பைகளை குப்பை தொட்டியில் போடாமல் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கிறார்கள். பல ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இன்றி மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து எங்கள் பகுதிக்கு செல்கிற பேருந்துகளில் எந்நேரமும் கூட்ட நெரிசலுடன் தான் செல்ல வேண்டி இருக்கிறது. ஆகவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்றார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த பயணிகள் கூறுகையில், மத்திய பேருந்து நிலையத்துக்கு தினமும் காலை வந்து வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் பேருந்து ஏறி வீடு திரும்புவேன். இங்கு ஒரு சில இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து வெளியே செல்கிறது.


அடிப்படை வசதிகள், சுகாதாரமின்றி இருக்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம்

இதனால் பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள். ஆனால் முன்பு இருந்ததைவிட தற்போது ஓரளவுக்கு பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்றார். திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், சுகாதார வசதிகளை மேம்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Trichy power cut: திருச்சியில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
திருச்சியில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
திடீரென மாற்றப்பட்ட ரயில் சேவை: ரயில் பயணிகளுக்கு ரயில்வே-யின் அவசர செய்தி!
திடீரென மாற்றப்பட்ட ரயில் சேவை: ரயில் பயணிகளுக்கு ரயில்வே-யின் அவசர செய்தி!
விசைத்தறி மூலம் ரஜினி உருவம்... “ஜெயிலர் 2” எழுத்து வடிவம்!கரூர் நெசவாளியின் புதுமை முயற்சிக்கு அங்கீகாரம்
விசைத்தறி மூலம் ரஜினி உருவம்... “ஜெயிலர் 2” எழுத்து வடிவம்!கரூர் நெசவாளியின் புதுமை முயற்சிக்கு அங்கீகாரம்
உன்னை உள்ளே தூக்கி வைப்பேன்”... சாட்சியை மிரட்டும் பெண் காவலரின் பரபரப்பு ஆடியோ வைரல்
உன்னை உள்ளே தூக்கி வைப்பேன்”... சாட்சியை மிரட்டும் பெண் காவலரின் பரபரப்பு ஆடியோ வைரல்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget