மேலும் அறிய

பெரம்பலூர் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம்  வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் இந்திராணி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யபட்டார்.

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு துறையை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தேனூர் தொட்டியபட்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி இந்திராணி(வயது 40). இவர் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம்  வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அய்யலூர் குடிக்காட்டை சேர்ந்த முருகானந்தத்தின் மனைவி முத்தரசி (40). இவர் தனது மாமனார் ராஜகோபால் பெயரில் உள்ள நிலத்தை தனது கணவர் முருகானந்தம் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக, மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்துள்ளார். இதற்கான மனுவை விசாரித்த வருவாய் ஆய்வாளர் இந்திராணி, பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்தரசி, இது குறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார்.இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனையின்படி, நேற்று மதியம் கொளக்காநத்தம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்ற முத்தரசி, வருவாய் ஆய்வாளர் இந்திராணியிடம் ரூ.20 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

அந்த பணத்தை வருவாய் ஆய்வாளர் இந்திராணி வாங்கியபோது, அங்கு மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து இந்திராணியை கையும், களவுமான பிடித்து கைது செய்தனர். மேலும் இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த சில மாதங்களாக அரசு அதிகாரிகள் மீது லஞ்சஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget