மேலும் அறிய

வாயால் வடை சுட்டு தள்ளும் மோடி- திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் நூதன பிரச்சாரம்

வாயால் வடை சுட்டு தள்ளும் மோடி- துண்டு பிரசுரத்தில் வடை - திருச்சியில்  திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் நூதன பிரச்சாரம்..

இந்தியாவில் தேர்தல் நெருங்கி வருவதால் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை புரிந்து வருகிறார். பாஜக கட்சியின் நிர்வாகிகளை சந்திப்பது, கோவிலுக்கு செல்வது, புதிய திட்டங்களை திறப்பது என்று பொய்யான தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருவதாக , திமுக, அதிமுக கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். நேற்று பிரதமர் மோடி சில திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார் அதில் குறிப்பாக இந்தியாவில் ஈனுலையை பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் அனுமதிக்க மறுத்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய வளர்ந்த நாடுகளே ஈனுலைகளை மறுத்துள்ளார்கள். மக்களுக்கு தீங்கு தரும் என வளர்ந்த நாடுகள் மூடிய ஈனுலையை தமிழ்நாட்டில் மோடி திறந்து வைத்துள்ளார். சோதனை எலிகளாக நம்மை பார்க்கிறார்கள்.இந்தியாவின் வளர்ச்சிக்கு சென்னை  உதவி இருக்கிறது என மோடி பேசி உள்ளார். அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒப்புதல் வாக்குமூலமாக தந்துள்ளார். இந்தியாவிற்கு உதவும் மாநிலமாக தி.மு.க ஆளும் தமிழ்நாடு தான் இருக்கிறது.

வாயால் வடை சுட்டு தள்ளும் மோடி- திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் நூதன பிரச்சாரம்

மோடிக்கு வயிற்றில் புலி கரைப்பதால் தான் தமிழ்நாட்டிற்கு மாதத்திற்கு ஐந்து முறை வருகிறார். தி.மு.க வை பார்த்து அச்சத்தில் இருக்கிறார்கள். வட மாநிலங்களில் காவி கொடி சரிந்து வருகிறது. வரும் தேர்தல் பா.ஜ.க விற்கு கடைசி தேர்தலாக இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த தேர்தல் இந்தியாவிற்கே கடைசி தேர்தலாகிவிடும். அண்ணாமலை செய்தது நடைபயணம் அல்ல அது நடைப்பயிற்சி. தமிழ்நாட்டிற்கு வந்த மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை சந்திக்கவில்லை. பல மாநிலங்களுக்கு செல்லும் மோடி மணிப்பூருக்கு செல்லவில்லை.தி.மு.க வை அழித்துவிடுவோம் என கூறியவர்கள் எல்லாம் அழிந்து போன வரலாறு மோடிக்கு தெரியவில்லை என்று நேற்று திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் விமர்சனம் செய்துள்ளார்.

வாயால் வடை சுட்டு தள்ளும் மோடி- திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் நூதன பிரச்சாரம்

திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஏ.கே அருண் தலைமையில் திமுக தகவல் தொழில் நுட்ப அணியினர் உறையூர் பகுதியில் பிரதமர் மோடியின் முகமூடி அணிந்து தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் மோடி வாயால் வடை சுடுகிறார் என்பது போல் துண்டு பிரசுரத்தில் வடையை பொதுமக்களிடம் கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இந்த பிரச்சாரத்தில் மோடி சுட்ட வடை எனக்கூறி பொதுமக்கள் யாரும் மோடியை நம்ப வேண்டாம் என நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சாரத்தில் மேற்கு தொகுதி அமைப்பாளர் கோவிந்தசாமி, மாவட்ட துணை அமைப்பாளர் லட்சுமணன் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப அணியினர் மோடியின் முகமூடி அணிந்து கையில் வடையுடன் பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget