மேலும் அறிய

கேரள குண்டு வெடிப்பு எதிரொலி; திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் முக்கியமான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ரயில், பேருந்து, விமான நிலையங்கள் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் நேற்று முந்தினம் காலை அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன. இதில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், 52 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கேரள மாநில போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்த தேசிய பாதுகாப்பு படையினரும், என்ஐஏ அதிகாரிகளும் கேரளா விரைந்துள்ளனர். இதர மத்திய, மாநில புலனாய்வு குழுவினரும் நேரடி மற்றும் ரகசிய புலனாய்வில் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க கேரள குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழகத்திலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை டிஜிபி சங்கர் ஜிவால் முடுக்கி விட்டுள்ளார். குறிப்பாக, கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸார் தீவிர தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் இம்மாவட்டவனப்பகுதிகளில் தமிழக போலீஸாருடன் வனத்துறையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


கேரள குண்டு வெடிப்பு எதிரொலி; திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

மேலும், கேரளா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு சந்தேகப்படும்படியாக யாரேனும் வந்தாலோ, அத்துமீறி நுழைய முற்பட்டாலோ அவர்களை உடனடியாக கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள ரயில், பேருந்து, விமான நிலையங்கள் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், நெல்லை, கன்னியாகுமரி உட்பட தமிழகத்தில் உள்ள 13கடலோர மாவட்டங்களில் கடலோரபாதுகாப்பு குழும போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சந்தேகப்படியான நபர்களின் நடமாட்டம் குறித்து அறிந்தால் அதுகுறித்து போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ளதங்கும் விடுதிகள், லாட்ஜிகளிலும்போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா, இங்கு வெடித்து சிதற கூடிய பொருட்கள் மற்றும் அதற்கான மூலப் பொருட்கள் ஏதேனும் பதுக்கப்பட்டுள்ளதா எனவும் போலீஸார் சோதித்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், கோயில், மசூதி, தேவாலயங்கள், பூங்காக்களிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாநில உளவு பிரிவு போலீஸாரும் தகவல்களை திரட்டி வருகின்றனர்.


கேரள குண்டு வெடிப்பு எதிரொலி; திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார். விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள் சோதனை முதல் விமான பயணிகளின் உடைமைகள் வரை அனைத்தும் பரிசோதனைக்கு பின்னரே விமான நிலையப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் பெட்டிகளும் சோதனைக்கு பின்னரே பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. மேலும் விமான நிலையத்தின் கார் நிறுத்தும் இடங்களில் தேவையற்ற வாகனங்கள் ஏதேனும் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தவிர பயணிகள் எவரேனும் சந்தேகப்படும் வகையில் விமான நிலைய பகுதிக்குள் நுழைந்திருந்தால் அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளின் உடைமைகள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
Trichy power cut: திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget