மேலும் அறிய

கலைஞர் நூலகம் என்ற பெயரை திருவள்ளுவர் நூலகம் என பெயர் மாற்றி வைக்க வேண்டும் - அர்ஜூன் சம்பத்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூர் சென்றதற்கு கருப்பு பேஜ் அணிந்து தங்களது,  எதிர்ப்பை i இந்து மக்கள் கட்சி  தெரிவித்தனர்

திருச்சி சிங்காரதோப்பு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை சிறப்பு வழிபாடு ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்தேன். பின்பு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தெற்கு கோபுர வாசலில் வெளியே அமைக்கப்பட்டு இருந்த ஈ. வேரா,  சிலை அகற்றப்பட்ட வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் ஆஜர் ஆனேன். இதனைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தரிசனம் செய்து மீண்டும் மோடி,  வேண்டும் மோடி , என பிரார்த்தனை செய்தேன். மீண்டும் மூன்றாவது முறையாக பாரத பிரதமராக மோடி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வேண்டி கொண்டேன். குறிப்பாக ஆடி மாதத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடுகள், சிறப்பு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறும். எனவே இந்த ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் கூழ்வார்க்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். 


கலைஞர் நூலகம் என்ற பெயரை திருவள்ளுவர் நூலகம் என பெயர் மாற்றி வைக்க வேண்டும் - அர்ஜூன் சம்பத்

மேலும் தமிழ்நாட்டில் இஸ்லாமிய ரமலான் பண்டிகையின் போது நோன்பு கஞ்சி திறப்பதற்கு தமிழக அரசு சார்பில் 5 ஆயிரம்  மெட்ரிக் டன் அரிசி வழங்குகிறது. அதேபோல ஆடி மாதத்தில் இந்து கோவில்களுக்கும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.  மேலும் டெல்டா மாவட்ட மக்களுக்கு கருப்பு தினம் ஆகும்.  கர்நாடக அரசு, நீதிமன்ற தீர்ப்பு வழங்கியும், காவிரி ஆணையம் அமைத்தும்,  தண்ணீரை  திறக்காமல் மழை பெய்தால் தண்ணீர் தருவேன் என கூறி வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி அழைத்த கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றது  கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களுக்கு தேவையான தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலைவாசி ஏறி உள்ளது. இதுகுறித்து தமிழக அமைச்சர்களிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால் இதற்கு மத்திய அரசுதான் காரணம் என பொய் வதந்தி பரப்பி வருகிறார்கள்.

மேலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு  விலைவாசி சீராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் மின்சாரம், பத்திரப்பதிவு உள்ளிட்டவைகளுக்கு 10 சதவீதம் கட்டணம் உயர்த்தபட்டுள்ளது. மத்திய அரசு மானியம் வழங்கியும் டிஜிட்டல் ரீடிங் வழங்கவில்லை, இந்த மின்சார கட்டண உயர்வால் நூல் விலை உயர்வு ஏற்படுகிறது. இதனால் தறி நெய்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.


கலைஞர் நூலகம் என்ற பெயரை திருவள்ளுவர் நூலகம் என பெயர் மாற்றி வைக்க வேண்டும் - அர்ஜூன் சம்பத்

 

இதனை கண்டித்து அரசிடம் கேள்வி எழுப்பினால், 2014ஆம் பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி 15 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில்  தருவதாக கூறினார் என பொய் வதந்தி பரப்பி வருகின்றனர் என்றார். இந்நிலையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்திலும், அவருக்கு சொந்தமான இடத்திலும் அமலாக்கத்துறை அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகிறார்கள். அமைச்சர் பதவி இருப்பதால் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்காமல் முடிக்க முயற்சி செய்து வருகிறார்கள் என குற்றம் சாட்டினார். ஆகஸ்ட் 16ஆம் தேதி பொது சிவில் சட்டத்தை ஆதரித்து சனாதன மாநாடு நடைபெற உள்ளது. இதேபோல் பழனியில் பாரதமாதா பக்தர்கள் மாநாடு நடைபெறும். ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி ராமேஸ்வரத்தில் எம் மக்கள் எம் நாடு என்ற தலைப்பில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்திற்கு இந்து மக்கள் கட்சி முழுமையாக ஆதரவளிக்கும்.  மீண்டும் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி அமைய இந்த நடைபயணம் ஒரு திருப்புமுனையாக அமையும்.  

இந்தியாவில் விஞ்ஞானிகள் ராக்கெட் ஏவி வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் சுதந்திரம் அடைந்த பிறகு ஈ.வேரா இந்தியாவில் ஒரு ராக்கெட் கூட விட முடியாது எனக் கூறினார். இதை எல்லாம் முறியடித்து இந்தியாவில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ராக்கெட்கள் அனுப்பி வெற்றி பெற்று வருகின்றனர். மேலும் நேற்று தமிழக அரசு சார்பில் மதுரையில் ரூபாய் 250 கோடி செலவில் கலைஞர் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தனர்.  தற்போது டிஜிட்டல் முறை வந்துவிட்டது, ஆனால் கருணாநிதி சிலை,  பேனா நினைவு சின்னம், வைப்பது என தமிழ்நாடு  அரசு பணத்தை வீணடிக்கின்றனர். கலைஞர் நூலகம் என்ற பெயரை திருவள்ளுவர் நூலகம் என பெயர் மாற்றி வைக்க வேண்டும்” எனப் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget