தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்: திருச்சி & தேனியில் நாளை! உங்க ஊரில் வேலை! உடனே பதியுங்கள்!
திருச்சி மாவட்டத்திலும், வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறவுள்ளது.
வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தமிழகத்தில் தனியார் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் அனைத்து தொழில் நிறுவனங்களும் தொடங்காமல் பல்வேறு மாவட்டங்களிலும் தொழில் முதலீடுகள் விரிவுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரே இடத்தில் வேலைவாய்ப்பு குவிந்து கிடக்காமல் பரவலாக வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. எனவே சொந்த ஊரிலேயே வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
நவம்பர் 8-ம் தேதி நாளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மூலம் திருச்சி மாவட்டத்திலும், வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த மாவட்டங்களில சேர்ந்தவர்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு பணி வாய்ப்பை பெறலாம். மேலும், வெற்றி நிச்சயம் திட்டத்தில் திறன் வளர்ச்சி பயிற்சிகளுக்கான விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
வெற்றி நிச்சயம் திட்டத்தில் திருச்சியில் Asgardia Foundation உடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
- நாள் : 08.11.2025
- இடம் : வாழ்நாள் கற்றல் துறை, காஜமலை வளாகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
- திருச்சிராப்பள்ளி -23.
- நேரம் : 9.30 முதல் 3.30 மணி வரை
நோக்கியா, அப்பலோ, முத்தூட், ஜன வங்கிகள், ஒமேகா ஹெல்கேர் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. வெற்றி நிச்சயம் திட்டத்தில் பல்துறை இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிகளின் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.
2017 முதல் 2025 ஆம் கல்வி ஆண்டு வரை பொறியியல், கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, ஐடிஐ, பார்மசி மற்றும் அனைத்து துணை படிப்புகளை முடித்தவர்களும் கலந்துகொள்ளலாம். குறிப்பாக பிரெஷர்ஸ் கலந்துகொள்ளலாம். இந்த முகாமில் வெற்றி நிச்சயம் திட்டத்தின் திறன் வளர்ச்சி பயிற்சிகளுக்கு பதிவு செய்து தரப்படும். இந்த முகாமில் கலந்துகொள்ள https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc1jVEXBsu3fKaW4JQSx என்ற் கூகுள் படிவத்தை நிரப்பி பதிவு செய்ய வேண்டும்.
தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது.
- நாள் : 08.11.2025 சனிக்கிழமை
- நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை
- இடம் : தேனி கம்மவார் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொடுவிலார்ப்பட்டி, தேனி
இந்த முகாமில் 125-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 8,000 மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இவைமட்டுமின்றி, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பம் வழங்கப்படும்.
தகுதிகள் : 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். 8ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.தேனி மாவட்ட மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம். அனைவருக்கும் அனுமதி இலவசம்.





















