மேலும் அறிய

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை - மக்கள் குற்றச்சாட்டு

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை, எக்ஸ்ரே கருவி பழுது மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும், 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 8 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது, 6 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். அன்னவாசல் சுற்று வட்டார பகுதியில் அதிக அளவில் கிராமங்கள் உள்ளதால், கிராம பகுதியில் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள், பல்வேறு நோய்களுக்கும், அவசர சிகிச்சைக்கும் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு வரும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் மணி கணக்கில் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அவசர சிகிச்சைக்கு வந்தால் முதலுதவி சிகிச்சை அளிக்க கூட போதிய டாக்டர்கள் இல்லாததால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை - மக்கள் குற்றச்சாட்டு

இலுப்பூர்-அன்னவாசல் மெயின் சாலையில் இந்த மருத்துவமனை உள்ளதால், தினமும் விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வருவோருக்கும் முதலுதவி சிகிச்சை கூட பெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். சாலை விபத்துக்கள், விஷக்கடிகள், விஷ மருந்து உட்கொள்ளுதல் உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற வேண்டியவர்கள் தற்போது டாக்டர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற முடியாமல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் அங்கு செல்வதற்குள் உயிர் பிரியும் நிலைமையும் ஏற்படுகிறது. எனவே அன்னவாசல் மருத்துவமனைக்கு போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை - மக்கள் குற்றச்சாட்டு

கடந்த பல மாதங்களாகவே அன்னவாசல் அரசு மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே மையத்தில் கருவி பழுதாகி வேலை செய்யவில்லை. இதனால் வேறொரு அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு எக்ஸ்ரே கருவியை அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துவந்து பின்னர் சில நாட்களில் மீண்டும் அந்த எக்ஸ்ரே கருவி அதே மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த மருத்துவமனையில் ஒரு ஆண்டுக்கு மேலாக எக்ஸ்ரே கருவிகள் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் அன்னவாசல் அரசு மருத்துவமனையை சுற்றி உள்ள சுற்றுச்சுவர் உடைந்து கிடப்பதால் அன்னியர்கள் உள்ளே வந்து மது அருந்துவது, தகாத செயலில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்னவாசல் அரசு மருத்துவமனை புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் மைய பகுதியில் உள்ளது. இம் மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராமமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால் இம்மருத்துவமனையில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் 20 கி.மீ. தொலைவில் உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தி அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநில அரசு இதுக்குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget