திருச்சி ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது- காவல்துறையினர் நடவடிக்கை
திருச்சி பிரபல ரவுடி கொலை வழக்கில் அவரின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்ளுக்கு வெவ்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளது. - காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதுக்கோட்டையில் திருச்சி ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகள் பயன்படுத்திய வாகன எண்ணெய் காவல் துறையினர் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி பொன்மலையை சேர்ந்தவர் சதாசிவம் மகன் இளவரசன் வயது (30) இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. புதுக்கோட்டை கொலை வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த இளவரசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார். தொடர்ந்து தினமும் காலை புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் மன்றத்தில் இளவரசன் கையெழுத்துயிட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி வழக்கம் போல் கையெழுத்து போட்டுவிட்டு நண்பர்களுடன் பைக்கில் செல்லும், போது புதுக்கோட்டை புதுக்குளம் பகுதியில் ஐந்து பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இளவரசனுடன் வந்த 4 நண்பர்களும் தப்பியோடி விட்டனர். இதுதொடர்பாக கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ் நகர் காவல் துறையினர் ரவுடி இளவரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மர்ம நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இளவரசனின் தந்தை சதாசிவம் மற்றும் உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வந்தனர்.
இதனை அடுத்து இளவரசன் உடல் வைக்கப்பட்டு இருந்த பிணவரையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. உடலை சதாசிவமிடம் ஒப்படைத்தனர். மேலும் நகர் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் இளவரசனுடன் வந்த அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் பிடித்து சென்று தொடர்ந்து 3 தினங்களாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றவாளியை பிடிப்பதற்காக 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. தனிப்படைகளும் தீவிரமான முறையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சில இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆதாரமாக கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இளவரசன் நண்பர்கள் 4 பேரிடமும் தொடர்ந்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் நேற்று முன்தினம் நள்ளிரவு கணேஷ் நகர் போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்