மேலும் அறிய

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,118 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் - எஸ்பி வருண்குமார்

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தேர்தல், 2024 அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அவர்களின் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  

இக்கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைத்தால் தமிழகத்திற்கு தேர்தல் தொடர்பான விபரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் குழு அமைப்பு 

மேலும் திருச்சி மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்திடும் பொருட்டு, 81 பறக்கும் படைகள். 81 நிலையான கண்காணிப்புக்குழுக்கள், 9 வீடியோ நிலையான கண்காணிப்பு குழுக்கள், வேட்பாளர்களால் தேர்தலுக்காக செலவிடப்படும் தொகையினை கண்காணித்திட 9 செலவு கண்காணிப்பு குழு, 9 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை 1800 599 5669 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம். மேலும் புகார்களை 6384001585 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் புகார்களை தெரிவிக்கலாம். புகார்கள் அனைத்திற்கும் 24 மணி நேரத்திற்குள் தீர்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,118 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் - எஸ்பி வருண்குமார்

திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் தலைமையில் தேர்தல் பாதுக்காப்பு பணி..

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 118 போலீசார் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக எஸ்பி வருண்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..  நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக ஒரு எஸ்பி தலைமையில் 3 ஏஎஸ்பி-க்கள், 8 டிஎஸ்பி-க்கள், 36 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 263 எஸ்ஐ-கள், ஆயிரத்து 424 போலீசார் மற்றும் 383 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 2 ஆயிரத்து 118 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையானது, ஒரு டிஎஸ்பி, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், 4 எஸ்ஐ-கள் மற்றும் 8 போலீசாருடன் இயங்கி வருகிறது. இதுமட்டுமின்றி விருப்பமுள்ள போலீசார் அல்லாத தேசிய மாணவர் படை, தேசிய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் மற்றும் போலீசார் ஆகியோர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget