இன்றைய தலைப்புச் செய்திகள் - 03.04.2021
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் நிறைவு - அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம்
அதிமுக மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து எந்த இடத்திலும் நேருக்கு நேர் விவாதிக்க தயார். திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து ஸ்டாலின் விவாதிக்க தயாரா? - முதல்வர் பழனிசாமி
தமிழகத்தின் கல்வி உரிமை, இடஒதுக்கீடு, வேலை வாய்ப்பை அழிக்கும் பாஜகவுக்கு அதிமுக துணை போகிறது. தேர்தல் முடிந்ததும் மக்கள் குறித்து பாஜக சிந்திக்காது - திமுக தலைவர் ஸ்டாலின்
வாரிசு அரசியலால் திமுகவில் மூத்த தலைவர்களிடையே அதிருப்தி நிலவுகிறது. மக்களும் வாரிசு அரசியலுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர் - பிரதமர் மோடி பேச்சு
தமிழகத்தில் அதிமுக ஆட்சி என்ற பெயரில் நாடகம் நடைபெறுகிறது. திமுக ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டியது மக்களின் கடமை - அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்
திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு. வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணம் இருந்ததாக அறிவிப்பு.
வருமான வரி சோதனை நடத்த நடத்த திமுக வலுப்பெறும் என பரப்புரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கண்டனம்.
ஆத்தூர் தொகுதியில் பரப்புரையின்போது திமுகவினர் தாக்கியதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றச்சாட்டு.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது. அதிகபட்சமாக சென்னையில் ஆயிரத்து 188 பேர் பாதிப்பு.
மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குவதால், ஓரிரு நாளில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் - முதல்வர் உத்தவ் தாக்கரே
புனேயில் கொரோனா வேகமாக பரவி வருவதால் பார்கள், ஹோட்டல்கள், விடுதிகள் 7 நாட்களுக்கு முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்த பிறகு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி - மத்திய அரசு விளக்கம்.
அசாமில் பாஜக வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம். மறுவாக்குப்பதிவு நடத்தவும் உத்தரவு.
டெல்லியில் கொரோனா தொற்றின் 4வது அலை வீசுகிறது. மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க திட்டமில்லை - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
தமிழ்நாட்டில் வெப்பநிலை உயர்வால் அனல்காற்று வீசுவது தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்