மேலும் அறிய

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு முறையான குடும்ப அட்டை வழங்கப்படும் - ராதாகிருஷ்ணன்

நியாய விலை கடையில் இடுபொருட்கள் வாங்கி வைக்கும் போது பொதுமக்கள் வேண்டுமானால் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம், வேண்டாம் என்றால் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது - ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு முதன்மை கூட்டுறவு கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருவண்ணாமலையில் பல்வேறு நியாய விலை  கடைகளை ஆய்வு செய்தார். முன்னதாக திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் 

நியாய விலைகடையில் பணியாற்றும் ஊழியர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டை குறைத்துக் கொண்டு பொது மக்களுக்கு ஏற்ப செயல்பட வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் இருக்கும் இந்த துறையில் கோடிக்கணக்கான பொதுமக்கள் கூட்டுறவு வங்கியின் மூலமாகவும் உளவுத்துறை மூலமாக இணைந்துள்ளார்கள். பொது மக்களுக்கு தேவையான பருப்பு மற்றும் பாமாயில் விநியோகத்தை முறையாக சீர் செய்யப்படும். நியாய விலை கடைகளில் வெளிப்படைத்தன்மையாக செயல்பட வேண்டும்.  அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பற்றாக்குறை இல்லாமல் நியாய விலை கடைகளில் இருப்பதாகவும், கோதுமை அளவு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு மட்டும் சிறப்பு அறிவிப்பு செய்து பாமாயில் மற்றும் பருப்பு வரவழைக்கப்பட்டுள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு முறையான குடும்ப அட்டை வழங்கப்படும் - ராதாகிருஷ்ணன்

கடந்த 17-ஆம் தேதி தமிழக முதல்வர் உடன் ஆலோசனை கூட்டம் நடத்தி தமிழகத்திற்கு தேவையான பருப்பு மற்றும் பாமாயில் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பற்றாக்குறை விரைவில் சீர் செய்யப்படும். நியாய விலைக் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் முறையாக சப்ளை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நியாய விலை கடைகளில் அரிசி பருப்பு சர்க்கரை இதனுடன் கட்டாயப்படுத்தி வேறு சில பொருட்களை நியாய விலை கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்தி எந்த ஒரு பொருளையும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என பலமுறை அறிவித்துள்ளதாகவும், குறிப்பாக நியாய விலை கடைகளில் பொருட்கள் இருப்பு குறைவாக இருக்கும் போது தரமான பொதுமக்களுக்கு பயன்படும் பொருட்களை வாங்கி நியாய விலையில் விற்பனை செய்ய மட்டுமே அறிவுரை வழங்கியுள்ளது. இதுபோன்று பொருட்கள் வாங்கி வைக்கும் போது பொதுமக்கள் வேண்டுமானால் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம், வேண்டாம் என்றால் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு முறையான குடும்ப அட்டை வழங்கப்படும் - ராதாகிருஷ்ணன்

நெல் மூட்டைகள்  மழையில் நனையாதவாறு பாதுகாக்க நடவடிக்கை  மேற்கொள்ளப்படுள்ளது 

கடந்த 10 ஆண்டுகளாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை கணக்கெடுக்காமல் அனைத்து நபர்களுக்கும் வழங்கும் குடும்ப அட்டை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கும் வழங்குவதால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதாகவும் தற்போது அந்த கணக்கெடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணிகள் முடிக்கப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு முறையான குடும்ப அட்டை வழங்கப்படும். அதேபோன்று தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் நிராகரிக்கப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட சாதாரண குடும்ப அட்டையை மாற்றம் செய்ய விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்தார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது விரைவில் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது.  மழைக்காலம் என்பதால் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தார்ப்பாய் மற்றும் பாலித்தீன் கவர் வாங்க ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.  தமிழகம் முழுவதும் உள்ள 36,000 மேற்பட்ட நேரடி கொள்முதல் நிலையத்திலும்  ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எத்தனை தார்ப்பாய் மற்றும் பாலித்தீன் பிளாஸ்டிக் சீட்டுகள் தேவைப்படுகிறது என்ற கணக்கீடுகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அந்தந்த பணிகள் முடிந்து ஒவ்வொரு மாவட்டதில்  உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்கப்படும் இது மட்டுமல்லாமல் இந்த முறை எந்த ஒரு நெல் மூட்டையும் மழையில் நனையாதவாறு பாதுகாக்க நடவடிக்கை மேற்க மேற்கொள்ளப்படும் என பேட்டி அளித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget