காஞ்சிபுரம், திருவள்ளூர் வளர்ச்சிக்கு புதிய பாதை! செங்கல்பட்டு-செய்யாறு சிப்காட் இணைப்பு சாலை: துவங்கிய பணிகள்
சென்னையுடன் செய்யார் சிப்காட் பகுதி இணைக்கும் வகையில், 43 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிதாக நான்கு வழி சாலை அமைக்கப்பட உள்ளது.

சென்னையின் புறநகர் மாவட்டங்களாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இதனால் சென்னைக்கு நிகராக சென்னையில் புறநகர் பகுதிகளும் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றன.
தொழிற்சாலைகள் நிறைந்த காஞ்சிபுரம்
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. புதிதாக தொழில் பூங்கா தொடங்குவது குறித்தும் தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோன்று காஞ்சிபுரம் அருகில் இருக்கக்கூடிய செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் புதிய தொழிற்சாலைகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அருகே உள்ள மாங்கால் பகுதியில் செய்யார் சிப்காட் செயல்பட்டு வருகிறது.
நேரடி சாலை இல்லாததால் போக்குவரத்து நெரிசல்
செய்யார் சிப்காட் பகுதிக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் நாள்தோறும் வந்து செல்கின்றன. நேரடியான சாலை செய்யாறு சிப்காட் பகுதிக்கு இல்லாததால், தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்களைக் கொண்டு வருவதற்கும், தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் தொழில் நிறுவனங்கள் பெரும் சவாலை சந்தித்து வருகின்றன.
செய்யார் சிப்காட் பகுதிக்கு நேரடியாக செல்வதற்கு, இணைப்பு சாலை இல்லாததால் கடும் போக்குவரத்தின ரிசல்ட் ஏற்பட்டு வருகின்றன. செய்யார் சிப்காட் பகுதியில் இருந்து துறைமுகம் செல்ல வேண்டுமென்றால் வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாக தான் செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. இதனால் செய்யார் தொழில் தடை பகுதியை சென்னையுடன் இணைக்கும் வகையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துவங்கி உள்ளது.
செய்யார் சிப்காட் புதிய இணைப்பு சாலை
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து, ஒரகடம் செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து செய்யார் சிப்காட் வரை 43 கிலோமீட்டர் தொலைவிற்கு செய்யாற்று புதிய இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து 33 கிராமங்கள் வழியாக இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்து சேர்ந்த 33 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. நான்கு வழிச்சாலையாக 60 மீட்டர் அகல சாலையாக அமைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.
செய்யார் சிப்காட் புதிய இணைப்பு சாலை அமைப்பதற்கு 127 ஏக்கர் அரசு நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதேபோன்று 492 ஏக்கர் பட்டா நிலங்களும் கையகப்படுத்த போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. கையகப்படுத்த உள்ள நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கி உள்ளன. நிலம் கையகப்படுத்துவதற்கு இப்பகுதியில் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர.
சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன ?
சென்னை செய்யார் சிப்காட் புதிய இணைப்பு சாலை பயன்பாட்டிற்கு வந்தால், காஞ்சிபுரம் பகுதியில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும். பல கிலோமீட்டர் சுற்றி செல்லக்கூடிய கனரக வாகனங்கள் நேரடியாக, சென்னை துறைமுக சாலையை மற்றும் சென்னை வெளிவட்ட சாலை ஆகியவற்றை அடைய முடியும். சென்னை எல்லைச்சாலை அமைக்கும் திட்டம் செயல்பட்டு வரும் நிலையில், இந்த சாலை மூலம் சென்னை எல்லைச்சாலையையும் எளிதாக அடைய முடியும்.
எந்த வழியாக இந்த சாலை அமைகிறது?
காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி கூட்ரோடு பகுதியில் இருந்து, செய்யாறு சிப்காட், அழிசூர், புத்தளி, மதூர், பாலூர், வளையக்கரணை, வடக்கப்பட்டு வழியாக இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.





















