Train Cancel: சென்னை கடற்கரை- திருவண்ணாமலை ரயில் ரத்து.. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
Tiruvannamalai Train cancel: பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை கடற்கரை முதல் திருவண்ணாமலை வரை இயக்கக்கூடிய ரயில் ஜூன் 18ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காட்பாடி பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை - திருவண்ணாமலை பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலை ரயில்கள் ரத்து
சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லக்கூடிய ரயில் மிக முக்கிய ரயில் சேவையாக தற்போது மாறி வருகிறது. ஏனென்றால் திருவண்ணாமலைக்கு தினமும் பல ஆயிரக்கணக்கானோர் படையெடுத்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த ரயில் சேவை மிகவும் பயனுள்ள சேவையாக மாறி வருகிறது.
இந்தநிலையில் சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலைக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காட்பாடி பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை கடற்கரை - திருவண்ணாமலை பயணிகள் ரயில் திருவண்ணாமலை - தாம்பரம் ரயில் உள்ளிட்ட ஆறு ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாளை ரயில்கள் ரத்து
அந்த வகையில் சென்னை கடற்கரை திருவண்ணாமலை மாலை 6 மணிக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு இரவு 9:10 மணிக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது
திருப்பதி - காட்பாடிக்கு இரவு 7 10 மணிக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை - தாம்பரம் அதிகாலை நாலு முப்பது மணிக்கு செல்லும் ரயில் 19ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேரமாக ரத்து செய்யப்படும் ரயில்
அரக்கோணம் - காட்பாடி இயக்கப்படும் பேசஞ்சர் ரயில் சேவூர் - காட்பாடி இடையே இயக்கப்படும்.
விழுப்புரம் - காட்பாடி இரவு 7 10 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், வேலூர் காட்பாடி இடையே பகுதி நேர மக்கள் ரத்து செய்யப்படுகிறது என செய்தி குறிப்பை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு வேண்டுகோள்
பராமரிப்பு பணி காரணமாக இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே ரயில்கள் ரத்து செய்யப்படுவதை முன்னிட்டு, பயணிகள் தங்களுடைய பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறும் ரயில்வே துறை அதிகாரிகள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.





















