மேலும் அறிய
Advertisement
தூத்துக்குடி: அரசு நிர்ணயம் செய்த விலைக்கு உரங்கள் விற்பனை - உரக்கடை முன் குவிந்த விவசாயிகள்
’’அரசு நிர்ணயம் செய்த 265 ரூபாய்க்கு யூரியா விற்பனை செய்யதது மட்டுமின்றி, உடன் வேறு எவ்வித உரத்தினை வாங்க கட்டயப்படுத்தவில்லை என்பதால் விவசாயிகள் உரத்தினை குவிந்தனர்’’
கோவில்பட்டியில் யூரியா உரம் வாங்க குவிந்த விவசாயிகள் - அரசு நிர்ணயம் செய்த விலைக்க விற்பனை செய்யப்பட்டதால் தனியார் உரக்கடையில் குவிந்த விவசாயிகள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகரில் தனியார் உரக்கடையில் அரசு நிர்ணயம் செய்த விலையில் யூரியா உரம் விற்பனை செய்யப்பட்டதால் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரே நேரத்தில் குவிந்து உரங்களை வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற கடைகளில் அரசு நிர்ணயம் செய்த 265 ரூபாயை விட 400 ரூபாய் கொடுத்து அதிக விலைக்கு உரங்களை விவசாயிகள் வாங்கி வந்தனர். மேலும் இந்த உரங்களுடன் மற்ற உரங்களையும் வாங்க வேண்டும் என்று கட்டயபடுத்தி வந்த நிலையில், இந்த தனியார் உரக்கடையில் எவ்வித கட்டுப்பாடு இல்லமால் அரசு நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் உரம் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் நீண்ட வரிசையில் நின்று மிகழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உளுந்து, பாசி, சோளம், கம்பு மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிர்களை ராபி பருவத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். களையெடுத்தல், மருந்து தெளித்தால் என விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் யூரியா உரம் கிடைக்கவில்லை என்பதால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். உர தட்டுப்பாட்டினை போக்க மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வந்தாலும் விவசாயிகளுக்கு போதிய அளவு உர கிடைத்தபாடு இல்லை, பல தனியார் உரக்கடைகள் உரங்களை பாதுக்கி வைப்பது மட்டுமின்றி, 265 ரூபாய் விற்பனை செய்ய வேண்டிய உரத்தினை 400 ரூபாய் வரை விற்பது மட்டுமின்றி, யூரியா உரம் வாங்கும் போது கலப்புரம் என்ற உரத்தினை வாங்க வேண்டும் என்று கட்டயப்படுத்தி வருவதாக தொடர்ந்து விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த ஒரு வாரகாலமாக மழை பெய்து தற்பொழுது வெயில் அடிக்க தொடங்கியுள்ளதால் விவசாயிகளுக்க உர தேவைகள் அதிகரித்துள்ளது. தற்பொழுது உரமிட்டதால் செடிகள் நன்கு வளரும் நிலை என்பதால் விவசாயிகள் உரத்தினை வாங்க அலைந்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவில்பட்டி மாதங்கோவில் சாலையில் உள்ள ஒரு லெட்சுமி உரம், விதை, பூச்சி மருந்து கடையில் அரசு நிர்ணயம் செய்த 265 ரூபாய்க்கு யூரியா விற்பனை செய்யதது மட்டுமின்றி, உடன் வேறு எவ்வித உரத்தினை வாங்க கட்டயப்படுத்தவில்லை என்பதால் விவசாயிகள் உரத்தினை குவிந்தனர். ஒவ்வொரு விவசாயிகள் 2 மூட்டை முதல் 6 மூட்டைகள் வரை வாங்கி சென்றனர். ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உரம் வாங்கி குவிந்த காரணத்தினால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் நீண்ட வரிசையில் நின்று உரங்களை வாங்கி சென்றனர்.அந்த தனியார் கடைக்கு இன்று தான் யூரியா உரம் வந்த நிலையில் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு விற்பனை செய்த காரணத்தினால் சிறது நேரத்தில் யூரியா உரம் விற்று தீர்ந்தன. அதிக விலைக்கு தேவையில்லாத உரத்துடன் வாங்கிய நிலையில், அரசு நிர்ணயம் செய்த விலைக்கு எவ்வித கட்டுபாடு இல்லமால் உரம் கிடைத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
இது தொடர்பாக தமிழ்விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி கூறுகையில், உர தட்டுபாட்டினை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் பல கடைகள் அதிக விலைக்கு விற்பனை செய்வது மட்டுமின்றி, உரங்களை பதுக்கி வைக்கும் நிலை இருப்பதாகவும், மேலும் யூரியா உடன் வேறு உரங்களையும் வாங்க கட்டயப்படுத்தி வருவதாகவும், எனவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலமாக விவசாயிகளுக்கு உரங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion