மேலும் அறிய
Advertisement
கொளுத்தும் வெயில்...! குமரி மாவட்ட அணைகளில் குறைந்து வரும் நீர் மட்டம்
கடை வரம்பு பகுதிக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு போக சாகுபடி செய்து வருகிறார்கள். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியே விவசயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். தற்போது மாவட்டம் கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் அறுவடை பணிகள் நடந்து வரும் நிலையில் கடை வரம்பு பகுதிகளான அஞ்சுகிராமம் பகுதியில் நெற்பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயாராகவில்லை. இதனால் பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீரின்றி பல்வேறு இடங்களில் இந்த பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. எனவே கடை வரம்பு பகுதிக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வரும் நிலையில் அணைகளின் நீர்மட்டம் சரிய தொடங்கியது. கடந்த 3 மாதங் களுக்கு முன்பு கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, பொய்கை, மாம்பழத்துறை யாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக மழை இல்லாமல் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்ததால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்தது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் கடந்த 3 மாதத்தில் 50 அடி சரிந்துள்ளது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 40.36 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு 497 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக் கிறது. அணையில் இருந்து 686 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 22.75 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு 77 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து 145 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 10.92 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 11.02 அடியாகவும் உள்ளது. 54.12 கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 2.97 அடி ஆகவும் பொய்கை அணையின் நீர் மட்டம் 22.60 அடியாகவும் உள்ளது. மாவட்டம் முழுவ தும் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்களில் பல்வேறு தண்ணீர் குறைய தொடங்கி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion