மேலும் அறிய

‛தேவை இருக்கு... ஆனால் செய்ய முடியலே...’ கலங்கி நிற்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

மண்ணாலும் மழையாலும் அகல் விளக்கு தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளதாக நெல்லையில் மண்பாண்ட தொழிலாளர்கள் வருத்தம்,

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் தயாராகும் மண் விளக்குகள், பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் பணிபுரியும் தொழிலாளர்களின் இன்றைய வாழ்க்கை நிலையை விளக்குகிறது இந்த பதிவு

‛தேவை இருக்கு... ஆனால் செய்ய முடியலே...’ கலங்கி நிற்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

கார்த்திகை தீபத் திருநாளின்போது வீடுகள் மற்றும் ஆலயங்களில் அகல் விளக்கு வைத்து வழிபாடு மேற்கொள்ளப்படுவது வழக்கம், வருகிற 19 ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படவுள்ளதையொட்டி, பல்வேறு பகுதிகளில் அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அருகே குறிச்சி பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் கார்த்திகை தீப விளக்கு தயாரிக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். தொங்குவிளக்கு, ஐந்து முக விளக்கு, அஷ்டலெட்சுமி விளக்கு, உருளி விளக்கு என சிறியது முதல் பெரியது வரையிலான விளக்குகள் தயாரித்து காய வைக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 2 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை விற்பனையாகும் இந்த விளக்கானது, நெல்லை மாவட்டத்தின் பிறபகுதிகள் மட்டும் இன்றி மதுரை, திருச்சி, கேரளா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

‛தேவை இருக்கு... ஆனால் செய்ய முடியலே...’ கலங்கி நிற்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி மண்பானைகள் தயாரிப்பு, கார்த்திகை மாதம் விளக்குகள் என ஒவ்வொரு சீசனுக்கு ஏற்றவாறு மண்பாண்ட பொருட்கள் தயாரித்து வருகின்றனர் மண்பாண்ட தொழிலாளர்கள். தற்போது கார்த்திகை மாத சீசன் என்பதால் மக்கள் மத்தியில் தேவைகள் அதிகம் இருந்தும் மழைக்காலம் என்பதால் காய வைப்பதில் சிரமம், தரமான மண் கிடைப்பதில்லை என்பதாலும் தேவையான உற்பத்தியை செய்ய முடிய வில்லை என்றும், போதிய இலாபமின்றியும் 50 பேர் வேலை செய்யும் இடத்தில் தற்போது 30 பேர் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறுகின்றனர்.

‛தேவை இருக்கு... ஆனால் செய்ய முடியலே...’ கலங்கி நிற்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக மண்பாண்ட தொழில் மிகவும் நலிவடைந்து இருந்த நிலையில் தற்போது சுற்று சூழலுக்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாத மண்ணால் ஆன விளக்குகள் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்தாண்டு அகல் விளக்குக்கான ஆர்டர்கள் நிறைய வருவதாகவும், ஆனால் அதன் மூலப்பொருளான போதுமான மண் எடுக்க அனுமதி இல்லாததால் தேவைகள் அதிகம் இருந்த போதும் அகல் விளக்கு தயாரிக்க இயலாத நிலையே உள்ளது,

‛தேவை இருக்கு... ஆனால் செய்ய முடியலே...’ கலங்கி நிற்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

 கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தோற்று காரணமாக தயாரிப்பு மந்தமாக இருந்தது தற்போது கொரோனா தொற்றில் இருந்து மீண்டாலும் தற்போது இந்த தொழிலின் மூலப்பொருளான மண் எடுப்பதில் மிகவும் பிரச்சனை உள்ளது தமிழக முதல்வர் அறிவித்த பின்னரும் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை தற்போது மழை பெய்து குளங்கள் பெருகிவிட்டது தற்போது பொது மக்களின் ஆர்வம் காரணமாக ஏராளமான ஆர்டர்கள் வந்துள்ளது  தேவை அதிகமாக  இருந்த போதிலும் மண் இல்லாததால் உற்பத்தி செய்ய முடியவில்லை குறைந்தளவே அகல் விளக்கை உற்பத்தி செய்து வருகிறோம் அதன் காரணமாக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தொழிலுக்கு தேவையான மண் தொழிலாளர்களுக்கு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்..

தலைப்பு செய்திகள்

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?

School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?

வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!

Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?

Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு

Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!

Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!

Embed widget