மேலும் அறிய

சிக்கிய உறவினர்! விசாரணையில் கிடுக்குப்பிடி! என்ன செய்யப்போகிறார் நயினார் நாகேந்திரன்!

உறவினர்களிடம் நடத்தப்படும் கிடுக்குப்பிடி விசாரணைகளும், கிடைக்கப்பெறும் தகவல்களும் நயினாருக்கு சாதகமாக அமையுமா? அல்லது எதிராக அமையுமா? என்பது அடுத்தடுத்த விசாரணை நகர்வுகளில் தான் தெரிய வரும்..!

பிடிபட்ட பணம்: 

நெல்லை தொகுதி பாஜக வேட்பாளராக நாடாளுமன்ற தேர்தலில் நயினார் நாகேந்திரன் களம் இறங்கியுள்ளார்.  கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் முடிவுக்காக அந்தந்த கட்சி சார்ந்த வேட்பாளர்கள் காத்துள்ளனர். இந்த நிலையில் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. குறிப்பாக கடந்த 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறக்கும் படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் சதீஷ், அவரின் நண்பர் பெருமாள், நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டு வந்தது. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தாம்பரம் காவல்துறையினர் நயினாருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.. மேலும்  நயினார் நாகேந்திரன் ஹோட்டல் ஊழியர் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரது ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனையும் நடத்தப்பட்டது. இது நயினார் நாகேந்திரனுக்கு பாதகமான  சூழலை உருவாக்கி உள்ளதாக பேசப்பட்டது.

தகுதி நீக்க வழக்கு:

இதனிடையே நெல்லை தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக இரண்டு மனுக்களை தாக்கல்  செய்திருந்தார். அதில் பாஜக வேட்பாளர்  நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நயினார் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

நீதிமன்ற உத்தரவு:

தகுதி நீக்க வழக்கு தொடர்பான மனு மீதான விசாரணை கடந்த 18 ஆம் தேதி வந்தது. அப்போது இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அதன்பிறகு பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்ற மனு மீது கடந்த 22 ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அதில் தேர்தலின் போது பறிமுதல் செய்யப்படும் பணம் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது என்றும் இது தொடர்பாக அமலாக்கத்துறையின் விளக்கத்தை பெற்று தெரிவிப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். அதன்படி ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது நயினார் நாகேந்திரனுக்கு சாதகமான சூழலை உருவாக்கியது.

சாதகமா? பாதகமா? 

4 கோடி பிடிபட்டதும் பரபரப்பாக பேசப்பட்டதுடன் அது தொடர்பான நபர்கள் கைது செய்யப்பட்டனர். இது தேர்தல் களத்தில் நயினாருக்கு எதிர்ப்பான சூழலை உருவாக்கியது. அதன்பின் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. இது நயினாருக்கு சாதகமான சூழலை உருவாக்கியது, அதன் பிறகு நயினார் நாகேந்திரன், ஆசைதம்பி, பாஜகவை சேர்ந்த கோவர்தனன் மற்றும் ஜெய்சங்கர், நவீன், பெருமாள் ஆகிய 5 பேருக்கும் காவல்துறை அனுப்பிய சம்மனும்,  நயினாருக்கு எதி்ராக  நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் அவருக்கு பாதகத்தை ஏற்படுத்தும் விதமாக மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின் அமலாக்கத்துறை தரப்பில் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது என்று தெரிவிக்கப்பட்டதும், காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு 10 நாட்கள் கால அவகாசம் கேட்டதும் அவருக்கு மீண்டும் சாதகமான சூழலை உருவாக்கியது. இந்த நிலையில் தான் தற்போது மீண்டும்  மே 2 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என நயினார்  நாகேந்திரனுக்கும் அவரது உறவினர் மணிகண்டன் என்பவருக்கும் தாம்பரம் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது தற்போது அவருக்கு பாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. தொடர்ச்சியாக பாதகங்களும் அது அவருக்கே சாதகமாக மாறுவதும் நடந்து வருகிறது.

கிடுக்குப்பிடி விசாரணை: 

பிடிபட்ட மூவரிடம் விசாரணை மேற்கொண்டதில் காவல்துறையினரிடம் நயினாருக்கு பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும், நயினாரின் உறவினர் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோர் பணத்தை தந்து அனுப்பியதாகவும் விசாரணையில் சொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அதனையடுத்து அவர்கள் மூவருக்கும் சம்மன் அனுப்பி நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் நயினாரின் உதவியாளர் மணிகண்டன் பணத்தை அனுப்பி வைக்குமாறு பேசினார் என காவல்துறை விசாரணையில் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் மீண்டும் நயினாருக்கும் அவரது உதவியாளருக்கும் சம்மன் அனுப்பி உள்ளது தாம்பரம் காவல்துறை. இது நயினாருக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. தொடர்ந்து உறவினர்களிடம் நடத்தப்படும் கிடுக்குப்பிடி விசாரணைகளும், கிடைக்கப்பெறும் தகவல்களும் நயினார் நாகேந்திரனுக்கு சாதகமாக அமையுமா? அல்லது எதிராக அமையுமா? என்பது அடுத்தடுத்த விசாரணை நகர்வுகளில் தான் தெரிய வரும்..!

தலைப்பு செய்திகள்

பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget