மேலும் அறிய
Advertisement
Soft Cricket: தெற்கு ஆசிய பெண்கள் சாப்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனைகள் - சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
தெற்கு ஆசிய பெண்கள் சாப்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் வீராங்கனைகளுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
தெற்கு ஆசிய பெண்கள் சாப்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் வீராங்கனைகளுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தெற்கு ஆசிய சாஃப்ட் கிரிக்கெட் போட்டிகள் நேபாள நாட்டில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் இந்தோனேசியா, இந்தியா மற்றும் நேபாள நாட்டு அணிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய கன்னியாகுமரி மாவட்ட வீராங்கனைகளுக்கு குழித்துறை இரயில் நிலையத்தில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நேபாள நாட்டில் கடந்த 28, 29,30 ஆகிய தேதிகளில் இந்தோனேசியா, இந்தியா மற்றும் நேபாள நாட்டு அணிகள் கலந்து கொண்ட தெற்கு ஆசியா சாஃப்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது. இந்த அணியில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 13 வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். அவர்கள் அனைவரும் வெற்றி கோப்பையுடன் சொந்த ஊர் திரும்பினார்கள் குழித்துறை இரயில் நிலையத்திற்கு வந்தனர் அவர்களுக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பொன்னாடைகள் போர்த்தியும் பூச்செண்டுகள் கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் வீராங்கனைகளுக்கு பயிற்சி வழங்கிய பயிற்சியாளர்களுக்கும் மரியாதை செய்தனர்.
மேலும் படிக்க: IND-W vs SL-W, 3rd ODI: ராஜேஸ்வரி சுழலில் சிக்கிய இலங்கை மகளிர் அணி... தொடரை ஒயிட்வாஷ் செய்து இந்தியா அசத்தல் !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion