மேலும் அறிய

Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு

Suriya 45 : ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் சூர்யா 45 படத்தின் பூஜை இன்று கோயம்புத்தூரில் நடைபெற்றுள்ளது

சூர்யா

பெரும் உழைப்பாலும் பொருட்செலவாலும் உருவான சூர்யாவின் கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியானது. சூர்யாவின் கரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று திரைப்படமாக உருவான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இப்படத்தின் தோல்வி தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் என மூன்று தரப்பையும் மனதளவில் பாதித்துள்ளது என்றே சொல்லலாம். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சூர்யாவின் படத்தை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் காணப்படுகிறார்கள். இனி மீண்டும் ஒரு வருடம் அடுத்த படத்திற்காக அவர்கள் காத்திருக்கும் நிலை. சமீபத்தில் சூர்யாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பரவலாக ஷேர் செய்யப்பட்டது. இதில் சூர்யா வழக்கமான உற்சாகமில்லாமல் சோர்ந்து காணப்பட்டார். கங்குவா படத்தின் தோல்வி சூர்யாவை தனிப்பட்ட முறையில் ரொம்பவும் பாதித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர். கங்குவா படத்தின் தோல்வியை கடந்து சூர்யா மீண்டு வரவேண்டும் அடுத்த ஆண்டு சிறப்பான கம்பேக் கொடுப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இப்படியான நிலையில் தான் சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

சூர்யா 45

சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தை நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி இயக்குகிறார். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. முன்னதாக ஆர்ஜே பாலாஜி எல்.கே பாலாஜி படத்திற்கு திரைக்கதை மற்றும் முக்குத்தி அம்மன் படத்தை இயக்கியிருக்கிறார். முந்தைய இரு படங்களும் காமெடி ஜானரை சேர்ந்தவை. ஆனால் தற்போது சூர்யாவை வைத்து அவர் இயக்கப்போகும் படம் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக இருக்கிறது. ஆர்.ஜே பாலாஜி சூர்யா காம்போவில் இப்படம் எந்த மாதிரியான ஒரு அனுபவமாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்களும் ஆர்வமாக காணப்படுகிறார்கள்.

சூர்யா 45 படத்தின் பூஜை இன்று கோயம்புத்தூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் சூர்யாவை மகிழ்ச்சியாக பார்த்த ரசிகர்கள் கங்குவா படத்தின் தோலியை மறந்து சூர்யா இந்த புதிய படத்திற்காக தயாராகிவிட்டார் என தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget