மேலும் அறிய
Advertisement
பாஜக ஆட்சிக்கு வந்தால் தானே..தூத்துக்குடியில் அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி
ஒன்றிய அரசு முடியாது என்று சொல்லிவிட்டார்கள் என்றால், அதன் பின் தளபதி தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகளை எடுப்பார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய நிலையில், பாஜக ஆட்சிக்கு வர போவதில்லை...ஆகவே, நாம் அதனை பற்றி கவலைப்பட தேவையில்லை என தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கனிமொழி எம்பி தெரிவித்தார்.
தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், வல்லவிளை ஆகிய இரண்டு பகுதிகளில் கூட்டுறவு நகை கடன் சங்கம் தொடங்கப்பட்டது. அதில் ஒன்றான தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகை கடன் சங்கத்தை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.
மேலும், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மேற்கொள்ள 40% மானியத்துடன் 5 மீனவர்களுக்கு 10 லட்ச ரூபாய் கடன் உதவிகள் மற்றும் ஏழு மீனவர்களுக்கு இரண்டு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பின்னர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவு நகை கடன் சங்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் மீனவருக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அது சிறந்த முறையில் செய்யப்படும்.
மாலத்தீவில் உள்ள மீனவர்களை தமிழக அரசு நிதி அளித்து காப்பாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு? மாலத்தீவில் இதுகுறித்து விசாரணை நடைபெற இருக்கிறது. ஆகவே, தமிழக அரசு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துகிறது. மேலும், வெளியோ இருந்து எளிதாக யார் வேண்டாமானாலும் பேசி விடலாம். சட்டம் என்ற ஒன்று இருக்கிறது. நடைமுறை என்ற ஒன்று இருக்கிறது. அந்த சட்டப்படி தான் அரசு செயல்பட முடியும். ஒன்றிய அரசு முடியாது என்று சொல்லிவிட்டார்கள் என்றால் அதன் பின் தளபதி (தமிழக முதல்வர் ஸ்டாலின்) அந்த நடவடிக்கைகளை எடுப்பார் என்றார்.
நேற்றைய தினம் திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்று கூறினார். அது குறித்து கனிமொழி எம்பியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு? அவர் ஆட்சிக்கு வந்தால் தானே.., அது நடக்கப்போவதில்லை... அப்புறம் ஏன் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும் என்றார்..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion