மேலும் அறிய
Advertisement
மிதவை கூண்டுகளில் மீன் வளர்த்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி - மீனவர்களுக்கான மாற்றுத்தொழில்...!
’’8 மாதங்களுக்கு முன் மிதவை கூண்டுகளில் விடப்பட்ட கடல் மீன்களில் 1.5 டன் அறுவடை’’
தூத்துக்குடி மாவட்டம் சிப்பிகுளம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ரெக்சன், இவர் மிதவை கூண்டுகளில் மீன் வளர்ப்பு தொழிலில் முன்னோடியாக மாறியுள்ளார். சிப்பிகுளம் கடல் பகுதியில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு சோதனை அடிப்படையில் மிதவை கூண்டில் மீன் வளர்க்கும் முறையை அறிமுகம் செய்தது.
இங்குள்ள கடல் சூழ்நிலை, நீரின் தண்மை, அலையின் தன்மை, ஆழம் போன்ற அனைத்து அம்சங்கள் குறித்தும் கடல்சார் ஆய்வாளர்கள் சுமார் ஓராண்டு காலம் தீவிர ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் சிப்பிகுளம் கடல் பகுதி மிதவை கூண்டுகளில் மீன்வளர்ப்புக்கு ஏற்ற இடம் என கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து முதலில் சோதனை அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு மிதவை கூண்டுகளில் சிங்கி இறால் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது ரெக்சன் 2 கூண்டுகளில் சிங்கி இறால் வளர்த்தார். முதல் முறையிலேயே கூண்டில் மீன் வளர்க்கும் திட்டம் நல்ல பலனை தந்ததால் ரெக்சன் இந்த தொழிலில் ஆர்வம் காட்ட தொடங்கினார். இன்று, தமிழகத்தில் கூண்டுகளில் மீன்களை வளர்க்கும் முன்னோடி மீனவராக அவர் மாறியிருக்கிறார். தற்போது சிப்பிகுளம் கடல் பகுதியில் 4 கூண்டுகளில் சிங்கி இறால் (Lobster fish), கடல் விரால் (Cobia fish), கொடுவா (Seabass fish) ஆகிய மீன்களை வளர்த்து வருகிறார்.
தற்போது சிப்பிகுளம் கடலில் 20 மிதவை கூண்டுகள் மூலம் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. சீனா நாட்டின் வருடப்பிறப்பை முன்னிட்டு சிங்கி இறால் சீனாவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும், ஆனால் கடந்த கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ஏற்றுமதி செய்ய இயலாத நிலை காரணமாக சிங்கி இறால் வளர்ப்பில் ஈடுபடவில்லை என்கின்றார் மீனவர் ரெக்சன். தற்போது கொடுவா, கடல் விரால் மட்டும் மிதவை கூண்டுகளில் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மிதவை கூண்டுகளில் விடப்பட்ட கடல் விராகளின் முதற்கட்ட அறுவடை நடந்தது. இதில் சுமார் ஒன்றரை டன் கடல் விரால் அறுவடை செய்யப்பட்டு உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்கின்றனர். இது குறித்து மீனவர் ரெக்சனிடம் கேட்டபோது, சிப்பிக்குளம் கடற்கரையில் இருந்து 250 மீட்டர் தொலைவில் கடலில் மிதவை கூண்டுகள் அமைத்து மீன்கள் வளர்த்து வருவதாக கூறும் இவர், கடந்த 8 மாதத்திற்கு முன் 750 முதல் 800 குஞ்சுகள் மிதவை கூண்டில் விடப்பட்டது, சுமார் 15 கிராம் எடை கொண்ட குஞ்சு ஒன்று 30 ரூபாய்க்கு வாங்கியதாக கூறும் இவர், காலை மாலை இருவேளையும் படகில் சென்று இரை போடுவோம், 2 வாரத்திற்கு ஒருமுறை வலையை சுத்தப்படுத்தும் பணிகளை செய்வோம், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மிதவை கூண்டு வலைகளை மாற்றுவோம் என்கிறார். தற்போது 8 மாதங்களுக்கு முன் விடப்பட்டு வளர்க்கப்பட்ட கடல் விரால் மீன் குஞ்சுகள் நல்ல வளர்ச்சியடைந்து உள்ளது. முதல்கட்ட அறுவடையில் ஒவ்வொரு மீனும் சுமார் 3 கிலோ முதல் 5 கிலோ வரை இருக்கு மொத்தம் 1.5 டன் அறுவடை செய்யப்பட்டு உள்ளது என்கிறார்.
தற்போது ஒரு கிலோ கடல் விரால் 350 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை போதுமானதாக இல்லை எனக்கூறும் மீனவர்கள், கடந்த 5 ஆண்டுக்கு முன்பே இதே விலை சென்றதாகவும் இதே விலையே இப்போதும் கிடைப்பதாகவும் கூறுகின்றனர். கொரோனா தொற்று காரணமாக ஏற்றுமதி செய்ய இயலாத நிலையில் விலை குறைவாக உள்ளது, சிங்கி இறால் உயிருடன் ஏற்றுமதி செய்யப்படும் போது அதிகவிலை கிடைக்கும் ஆனால் ஏற்றுமதி இல்லாத நிலையில் சிங்கி இறால் வளர்ப்பை நிறுத்தி உள்ளதாகவும் நிலைமை சீரானால் மீண்டும் சிங்கி இறால் வளர்ப்பில் ஈடுபடுவோம் என்கின்றனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
உடல்நலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion