(Source: ECI/ABP News/ABP Majha)
மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் 1.40 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய் உட்பட 5 பேர் கைது
”மூன்றாவதும் பெண் குழந்தை என்பதால் தனக்கு தெரிந்த ஆட்டோ ஓட்டுனர் மாரியப்பன் என்பவர் மூலம் குழந்தையை கேரள தம்பதியினரிடம் விற்பனை செய்துள்ளனர்”
நெல்லை மாவட்டம் உவரி அருகே அண்ணாநகரைச் சேர்ந்தவர் விஜயன். இவருடைய மனைவி தங்க செல்வி, இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். விஜயன் 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் தங்கசெல்வி உவரி அண்ணா நகரைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2-வது திருமணம் செய்துள்ளார், அவர் மூலம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தங்க செல்விக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் அதனை விற்க முடிவு செய்தார்,
அதன்படி கூட்டப்பனை அருகே சுனாமி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மாரியப்பனிடம் தனது பச்சிளம் குழந்தையை கொடுத்து உள்ளார், பச்சிளம் குழந்தையை மாரியப்பன் 1.40 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார். பின்னர் மாரியப்பன் குழந்தையை கேரள மாநிலம் கோட்டயம் அருகே ஆம்பூரை சேர்ந்த செல்வகுமார்-சந்தனவின்ஷியா என்ற தம்பதியிடம் விற்றுள்ளார். இந்த தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் மாரியப்பனிடம் குழந்தையை வாங்கி உள்ளனர்,
அந்த தம்பதியினர் குழந்தையை கோட்டயம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர், அப்போது அந்த குழந்தை விலைக்கு வாங்கப்பட்டதும், குழந்தையின் பெற்றோர் குறித்த விவரமும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிய வந்ததுள்ளது, இதனை அடுத்து கேரள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் குழந்தைகள் நலக்குழு தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அங்கிருந்து அவர்கள் நெல்லையில் உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர், பின்னர் அவர் இது குறித்து உவரி போலீசில் புகார் தெரிவித்தார், அதன் அடிப்படையில் உவரி போலீசார் வழக்கு பதிவு செய்து கேரளாவில் விற்பனை செய்யப்பட்ட குழந்தையை பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக குழந்தையின் தாய் தங்கசெல்வி, குழந்தையை வாங்கிய கேரள தம்பதி செல்வக்குமார் - சந்தனவின்ஷியா மற்றும் குழந்தையை விற்பனை செய்த மாரியப்பன் ஆகிய 4 பேரை கைது செய்தனர், தொடர்ந்து குழந்தையின் தந்தை அர்ஜுனனை காவல்துறையினர் தேடி வந்த சூழலில் அவரும் கைது செய்யப்பட்டார், பெற்ற குழந்தையை விற்பனை செய்த தாய் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்