மேலும் அறிய
Advertisement
நாகர்கோவிலில் அக்னிபத் திட்டம் தொடங்கியது - நாள் ஒன்றிற்கு 3 ஆயிரம் பேர் பங்கேற்பு
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நள்ளிரவு முதல் துவங்கியது. நாள் ஒன்றிற்கு 3 ஆயிரம் பேர் வீதம் 36 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் துவங்கியது. நாள் ஒன்றிற்கு 3 ஆயிரம் பேர் வீதம் 36 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவின் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று நிலை ஆயுதப் படைகளிலும் ஆட்சேர்ப்புக்காக அக்னிபத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.
2019 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளாக இந்திய இராணுவத்தில் ஆள்சேர்ப்பு எதுவும் செய்யப்படவில்லை. இராணுவத்தில் ஆட்சேர்ப்பு செய்யாததற்காக கோவிட்-19 தொற்றுநோயை இந்திய அரசு மேற்கோள் காட்டியது. இதற்கிடையில், 50,000-60,000 வீரர்கள் ஆண்டுதோறும் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து இராணுவத்தில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் இராணுவத்தில் அதிக அளவில் இளைஞர்களை சேர்க்கும் வகையிலும், வேலைவாய்ப்பை பெருக்கும் விதமாகவும் அக்னிபத் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதிகாரிகள் அல்லாத படைவீரர்களை ஆயுதப்படையில் சேர்த்துக் கொள்வதற்காக இந்தியப் பாதுகாப்புத் துறை அறிமுகப்படுத்தும் திட்டமே அக்னிபத் திட்டமாகும். ஆட்சேர்ப்பு ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் நிலையில் சுமார் 45000 முதல் 50000 உறுப்பினர்களைக் கொண்ட பயிற்சி பெற்ற அக்னிவீரர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படுவார்கள்.
4 ஆண்டு பணிக்காக இவர்களுக்கு 6 மாத பயிற்சி வழங்கப்படும். இதற்கான ஆள் சேர்ப்பு முகாம் கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. இதற்காக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, சிவகங்கை, மயிலாடுதுறை, கரூர், திண்டுக்கல், விருதுநகர், காரைக்கால், பெரம்பலூர் உள்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இம்முகாம் வரும் 1 ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக ஆன்லைன் மூலமாக 36 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. இதில் தினமும் 3 ஆயிரம் பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் அமர வசதியாக மூன்று இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தை திடல், மாநகராட்சி புதிய அலுவலக கட்டிட வளாகம், அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து நீச்சல் குளத்திற்கு செல்லும் பகுதி ஆகிய பகுதிகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை வரை ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில் நாகர்கோவில் வந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் பந்தல் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் ஓய்வெடுத்து, பின்னர் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் விளையாட்டு அரங்கத்திற்கு சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion