தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் டெண்டர் முறைகேடுகள் குறித்து விசாரணை வேண்டும் - ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை
வருடாந்திர வேலைகளில் அனைவரும் பங்கேற்கும் வகையில் மூன்று வருடத்திற்கு முன் இருந்தது போல் டெண்டர் வைக்கப்பட்டால் எங்களை போன்றவர்கள் மிக குறைந்த விலைபுள்ளிகள் கொடுத்து வேலை பெற்று செய்ய முடியும்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் டெண்டர் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி அனல் மின் நிலைய தலைமை பொறியாளருக்கு ஒப்பந்ததாரர்கள் அளித்துள்ள மனுவில், "28.06.2024 அன்று நடைபெற்ற மெயின்டனன்ஸ் பணிக்கான சிவில் டென்டரில் கலந்து கொண்ட ராஜம் ஒப்பந்ததாரரின் டெண்டரில் இரண்டு லட்சம் குறைவான ரேட் போட்டும் எந்தவித பரிசீலனையும் செய்யப்படாமல் முன் வேலை செய்த அனுபவம் வைத்திருந்தும் இல்லையென வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதே டெண்டரில் மற்றொரு கோகுல் ஒப்பந்ததாரரின் டெண்டர் அவசரகதியில் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு முன் வேலை செய்த எந்த அனுபவம் இல்லை. 01.04.2024 முதல் 30.06.2024 வரை முடிவுறாத O.N மூலம் கொடுக்கப்பட்ட பராமரிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் வேலையை வைத்து முன் அனுபவமாக எடுத்து ஒப்பன் செய்துள்ளார்கள். இதற்கு முன்னும் இதே போன்று புதியதாக வந்த MSC காண்ட்ராக்டரிடமும் பேரம் பேசி ON மூலம் மூன்று மாதம் நாமினேஷனாக வேலையைக் கொடுத்து அவருக்கு முன் அனுபவம் வந்துவிட்டது என்று கூறி மெயின்டனன்ஸ் வேலைகளை கொடுத்துள்ளனர்.
இதனால் சாதாரண பணிகளான தூய்மை பணி, குப்பை அள்ளும் பணி, தண்ணீர் திறக்கும் பணி, ரூப்டாப் கிளினிங் பணி, ட்ரெயினேஜ் கிளினிங் பணி என அனைத்திற்கும் சிமிலர் டைப் ஒர்க் ஆர்டர் வைத்தால்தான் டெண்டர் ஒப்பன் செய்யப்படும் என்ற நிலையை தூ.அ.மி.நி சிவில் நிர்வாகம் ஏற்படுத்தி போட்டியாளர்களே இல்லாமல் வருடாந்திர பராமரிப்பு வேலைகளை முடித்து அதிகாரிகள் சுய இலாபம் பார்த்து விடுகின்றனர்.
இதனால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு வருடத்திற்கு கோடி கணக்கில் இழப்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இவ்வாறான சிமிலர் டைப் ஒர்க் ஆர்டர் வைத்தால் தான் பராமரிப்பு வேலை அட்டன் செய்ய முடியும் என்பது கடந்த மூன்று வருடங்களாக உள்ளது.அதற்கு முன்னர் கிடையாது. இதனால் எங்களை போன்ற ஒப்பந்ததாரர்கள்.
வருடாந்திர வேலைகளை டெண்டர் எடுக்க முடியாத நிலை உள்ளது. புதிதாக வரும் வருடாந்திர பராமரிப்பு வேலைகளையும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு O.N ஓர்க் மூலம் மூன்று மாதங்களுக்கு வேலையை கொடுத்து அதையே முன் அனுபவமாக வைத்து வருடாந்திர வேலைகளை கொடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோடிகணக்கில் லாபம் பார்த்து விடுகின்றனர். வருடாந்திர பராமரிப்பு வேலைகள் அனைத்திலும் இரண்டு கான்ட்ராக்டர்கள் மட்டுமே அட்டன் செய்ய வைக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவருக்கு எஸ்டிமேட்டில் பெயரளவுக்கு ஆயிரம் ரூபாய் குறைத்து ஒர்க் ஆர்டர் வழங்குகின்றனர்.
இந்த வருடாந்திர வேலைகளில் அனைவரும் பங்கேற்கும் வகையில் மூன்று வருடத்திற்கு முன் இருந்தது போல் டெண்டர் வைக்கப்பட்டால் எங்களை போன்றவர்கள் மிக குறைந்த விலைபுள்ளிகள் கொடுத்து வேலை பெற்று செய்ய முடியும். இதனால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். நியாயமான தீர்ப்பு வரும் வரை டெண்டரில் கலந்து கொண்டவர்களுக்கு ஆணை வழங்க கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.