மேலும் அறிய

வல்லநாடு ஆற்று பாலத்தில் 4 ஆண்டுக்கு பிறகு இருவழி பாதைகளில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

வல்லநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பெரிய நான்குவழிப் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை கடந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த வல்லநாடு ஆற்று பாலம் சீரமைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

வல்லநாடு ஆற்று பாலத்தில் 4 ஆண்டுக்கு பிறகு இருவழி பாதைகளில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

கன்னியாகுமரி- காஷ்மீர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47.250 கி.மீ. தொலைவுக்கு ரூ.349.50 கோடியில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2010-ம்ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 2013-ம்ஆண்டு முடிவடைந்து வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இந்த நான்குவழிச் சாலையில் வல்லநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பெரிய நான்குவழிப் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை கடந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

வல்லநாடு ஆற்று பாலத்தில் 4 ஆண்டுக்கு பிறகு இருவழி பாதைகளில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

ஆனால், இந்த பாலம் அடிக்கடி சேதமடைந்து வந்தது. பாலம் கட்டப்பட்டு நான்கு ஆண்டுகளிலேயே கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலத்தின் ஒரு பகுதியில் (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) நடுவே பெரிய ஓட்டை விழுந்தது. இதனால் சுமார் 6 மாத காலம் இந்த பாதையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் ரூ.3.14 கோடி ஒதுக்கப்பட்டு பாலம் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி பாலத்தின் மற்றொரு பகுதியில் (தூத்துக்குடி- திருநெல்வேலி வழித்தடம்) 2 பெரிய ஓட்டைகள் விழுந்து சேதம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து இரு மார்க்கங்களில் செல்லும் அனைத்து வாகனங்களும் ஒருவழிப் பாதை (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) வழியாக திருப்பி விடப்பட்டன. சுமார் 4 ஆண்டுகளாக வாகனங்கள் அனைத்தும் ஒருவழிப் பாதை வழியாகவே சென்று வந்தன. இந்த ஒரு வழிப்பாதையிலும் அடிக்கடி ஓட்டை விழுந்து பாதிப்பு ஏற்பட்டு, தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வந்தனர்.

வல்லநாடு ஆற்று பாலத்தில் 4 ஆண்டுக்கு பிறகு இருவழி பாதைகளில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

இந்நிலையில் சேதமடைந்த வல்லநாடு ஆற்று பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. பாலத்தின் இரு பகுதிகளையும் முழுமையாக நவீன தொழில் நுட்பத்தில் சீரமைக்க ரூ.13.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 12 மாதங்களில் பணிகளை முடிக்கும் வகையில் ஒப்பந்தம் விடப்பட்டது. பணிகள் தொடங்கி ஓராண்டு கடந்துள்ள நிலையில் பாலத்தின் ஒரு பகுதி முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழியாக (தூத்துக்குடி- திருநெல்வேலி வழித்தடம்) தற்போது போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது பாலத்தின் இரு வழியிலும் போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் எந்த சிரமமும் இல்லாமல் வல்லநாடு ஆற்று பாலத்தை கடந்து வருகின்றனர், மழை காலம் முடிவடைந்ததும் பாலத்தின் மற்றொரு பகுதியில் (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும். இந்த பகுதியில் பாலத்தின் அடியில் செய்ய வேண்டிய பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டதால், சீரமைப்பு பணிகள் 2 மாதங்களில் முடிவடைந்து விடும். இந்த பணிகள் நடைபெறும் போது வாகனங்கள் அனைத்தும் மீண்டும் ஒரு வழிப்பாதையில் (தூத்துக்குடி- திருநெல்வேலி வழித்தடம்) திருப்பி விடப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget