மேலும் அறிய

Thoothukudi Air Bus: தூத்துக்குடியில் "ஏர் பஸ்" எப்ப வருது தெரியுமா? - ரெடியா இருங்க பயணிகளே..!

சென்னை, பெங்களூரு மட்டுமின்றி, ஹைதராபாத், குஜராத், மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்தியாவின் பெரிய நகரங்களுக்கு விமான சேவை.

தூத்துக்குடி விமான நிலைய கட்டுமான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கனிமொழி எம்.பி. அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் நான்கு வழிப்பாதைகளையும் கொண்ட ஒரே மாவட்டம் தூத்துக்குடி தான். வான்வழி, தரைவழி, ரயில் வழி, கப்பல் வழியென நான்கு தடங்களையும் உள்ளடக்கிய தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் ஐந்தாவது தடமாக விண்வெளி தடமும் அமைய உள்ளது. தொழிற்சாலைகள், துறைமுகம் என வளர்ந்து வரும் நகரமாக தூத்துக்குடி இருந்து வருகிறது. பர்னிச்சர் பார்க், வின் பாஸ்ட் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் என அடுத்தடுத்து புதிய திட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் ஐந்து முறை விமானமும், பெங்களூருக்கு இருமுறை விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.

Thoothukudi Air Bus: தூத்துக்குடியில்

வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்கள் வசதிக்காக தூத்துக்குடி விமான நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.227.33 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் அமைத்தல் உள்ளிட்ட விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த புதிய பயணிகள் முனையம் 17 ஆயிரத்து 341 சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் அதைச்சார்ந்த அலுவலகக் கட்டிடங்கள், தீயணைப்புத்துறை கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது. தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விமானநிலைய புதியமுனையத்துக்கு செல்லும் வகையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இணைப்புச்சாலை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

Thoothukudi Air Bus: தூத்துக்குடியில்

புதிய முனையத்தில் புறப்பாடு பகுதியில் 4 வாயில்களும், 21 பயணியர் செக் இன் கவுண்டர்களும், 3 ஏரோப்ரிட்ஜ்களும், 2 வருகைக்கான கன்வேயர் பெல்ட்களும், ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், 2 வி.ஐ.பி. அறைகள், லிப்ட் வசதிகள், பயணிகள் அதிகமாக வருகை தரும் நேரங்களில் 1 மணி நேரத்துக்கு1440 பயணிகளை கையாளக்கூடிய வகையிலான வசதிகள், பயணிகள் வருகை, புறப்பாடு, பயணிகள் காத்திருப்புஅறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீனவசதிகளுடன் உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

Thoothukudi Air Bus: தூத்துக்குடியில்

இந்த புதிய முனையம் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டிடமாக அமைக்கப்பட்டு வருகிறது. முனைய கட்டிடங்கள் முழுவதும் சோலார் பொறுத்தப்பட்டு உள்ளது. தற்போது வரை 76 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வருகிற 2024 அக்டோபர் மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதே போன்று ரூ.113.63 கோடி மதிப்பீட்டில் 3115 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. தற்போது வரை 93 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் இந்தமாதம் இறுதிக்குள் முடிவடைய உள்ளது.

Thoothukudi Air Bus: தூத்துக்குடியில்

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடிவடைந்ததும் சென்னை, பெங்களூரு மட்டுமின்றி, ஹைதராபாத், குஜராத், மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்தியாவின் பெரிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படும். சுமார் 250 பயணிகள் செல்லும் ஏ 321 ரக ஏர்பஸ் விமானங்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை விமான நிலைய ஓடுதளத்தின் நீளம் 3611 மீட்டர். அதற்கு அடுத்தப்படியாக 3115 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்ட இரண்டாவது பெரிய ஓடுதளம் கொண்ட விமான நிலையமாக தூத்துகுடி அமைகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலைய கட்டுமான பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து அவர் விமானநிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினார். ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விமான நிலைய இயக்குனர் ராஜேஷ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget