மேலும் அறிய

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு - முன்னாள் சபாநாயகர் தனபால் சாட்சியம்

முன்னாள் சபாநாயகர் தனபால் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் நீதிபதி சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார்.

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு - முன்னாள் சபாநாயகர் தனபால் சாட்சியம்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு, மாவட்ட நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில்  நடைபெறும் விசாரணைக்கு  முன்னாள் சபாநாயகர் தனபால் ஆஜரான நிலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக குறுக்கு விசாரணை நடைபெற்றது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு - முன்னாள் சபாநாயகர் தனபால் சாட்சியம்

கடந்த 2001 - 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஐயப்பன் தலைமையில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் அவரது மகன்கள் அனந்த ராமகிருஷ்ணன் அனந்த மகேஸ்வரன் ஆகிய 2 பேர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக் கோரி அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 3-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு - முன்னாள் சபாநாயகர் தனபால் சாட்சியம்

இந்நிலையில், இந்த வழக்கு, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஐயப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய தமிழக சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து தனபாலும் இந்த வழக்கில் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதையடுத்து நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு தனபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் தனபால் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் நீதிபதி சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஐயப்பன் உத்தரவிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இது பதவி இல்ல.. பொறுப்பு" இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி.. எமோஷனலான அனுரா குமார திசாநாயக்க!
செஸ் ஒலிம்பியாட்.. தங்கம் வென்று அசத்திய இந்தியா!
செஸ் ஒலிம்பியாட்.. தங்கம் வென்று அசத்திய இந்தியா!
இலங்கை அதிபர் தேர்தல்.. அனுரா குமார திசாநாயக்க வெற்றி!
இலங்கை அதிபர் தேர்தல்.. அனுரா குமார திசாநாயக்க வெற்றி!
Kerala Nipah Virus: கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதி.! தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்.!
Kerala Nipah Virus: கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதி.! தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manimegalai reply to kuraishi |”சொம்புக்குலாம் மரியாதையா! அப்போ அந்த WHATSAPP மெசெஜ்”மணிமேகலை பதிலடிSchool Students reels | பேருந்து டாப்பில் ஏறி REELS.. பள்ளி மாணவர்கள் அட்ராசிட்டி!Anura Kumara Dissanayake | இலங்கை அதிபராகும் கூலித்தொழிலாளியின் மகன்!யார் இந்த AKD?Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இது பதவி இல்ல.. பொறுப்பு" இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி.. எமோஷனலான அனுரா குமார திசாநாயக்க!
செஸ் ஒலிம்பியாட்.. தங்கம் வென்று அசத்திய இந்தியா!
செஸ் ஒலிம்பியாட்.. தங்கம் வென்று அசத்திய இந்தியா!
இலங்கை அதிபர் தேர்தல்.. அனுரா குமார திசாநாயக்க வெற்றி!
இலங்கை அதிபர் தேர்தல்.. அனுரா குமார திசாநாயக்க வெற்றி!
Kerala Nipah Virus: கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதி.! தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்.!
Kerala Nipah Virus: கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதி.! தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்.!
சென்னையில் விரைவில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்.. வந்தது செம்ம அப்டேட்!
சென்னையில் விரைவில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்.. வந்தது செம்ம அப்டேட்!
"வெங்கடாஜலபதி மன்னிச்சுடு" திருப்பதி லட்டு விவகாரம்.. விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்!
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
IND vs BAN: பிரம்மாண்ட வெற்றி! வங்கதேசத்தை சுருட்டி வீசிய அஸ்வின்! 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!
IND vs BAN: பிரம்மாண்ட வெற்றி! வங்கதேசத்தை சுருட்டி வீசிய அஸ்வின்! 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!
Embed widget