திமுக ஆட்சி காலம் முடிவதற்குள் நுகர்பொருள் வாணிப கழகத்தை முழுமையாக காலி செய்து விடுவார்கள் - முன்னாள் அமைச்சர் காமராஜ்
மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தையும் காலி செய்யப் போகிறார்கள். திமுக ஆட்சி காலம் முடிவதற்குள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை மொத்தமாக காலி செய்து விடுவார்கள் என்று அவர் பேசினார்.
திமுக ஆட்சி காலம் முடிவதற்குள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை முழுமையாக காலி செய்து விடுவார்கள் என்று மின் கட்டண உயர்வை கண்டித்து பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசினார்.
தமிழக அரசு மின் கட்டண உயர்வை சமீபத்தில் அறிவித்திருந்தது. இதற்கு பொதுமக்களும் பல்வேறு தரப்பினரும் அரசியல் கட்சிகளும் தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் இன்று தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அஇஅதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்ட அஇதிமுக சார்பில் முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் மாவட்ட கழகச் செயலாளருமான காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட அதிமுக கலந்து கொண்டனர். இதில் பேசிய காமராஜ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாலிக்கு தங்கம் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்குதல் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை காலி செய்ததை தவிர வேறு எந்த சாதனையும் திமுக செய்யவில்லை. அதே போன்று அடுத்து மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தையும் காலி செய்யப் போகிறார்கள். திமுக ஆட்சி காலம் முடிவதற்குள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை மொத்தமாக காலி செய்து விடுவார்கள் என்று அவர் பேசினார்.
மின் கட்டண உயர்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்ன ஏனென்றால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று அவர் பேசினார். கனமழையினால் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்துள்ளன.இதற்கு உரிய நிவாரணம் இது வரை வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை காலி செய்து விடுவதாக கூறினார்கள்.தற்போது யாருடைய பிள்ளைகள் காலியாகிக் கொண்டிருக்கிறார்கள் எத்தனை தற்கொலைகள் நீட் தேர்வினால் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு விஷயத்தை முடியும் என்றால் முடியும் என்று சொல்ல வேண்டும் முடியாது என்றால் முடியாது என்று சொல்ல வேண்டும்.முடியாததை முடியும் என்று சொல்லி எத்தனை குழந்தைகள் இன்றைக்கு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.மேட்டூர் அணையில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்டதன் காரணமாக பருத்தி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இவர்கள் முன்கூட்டியே தண்ணீர் திறந்ததன் காரணமாக நடந்த சாதனை அது தான்.அதேபோன்று குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. அதனை கணக்கெடுப்பதற்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை.அதிகாரிகள் வந்தால்தான் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் அதிகாரிகளே வராத போது அவர்களுக்கு எப்படி நிவாரணம் கிடைக்கும் என்று அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் தமிழக அரசு மின் கட்டண உயர்வை உடனடியா வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை புறக்கணிக்கும் வேலையில் ஈடுபடுவதை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி கண்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.