மேலும் அறிய

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள்... பொதுமக்களுக்கு இலவச உணவு! கொண்டாடி தீர்த்த திமுகவினர்

புலிவலம் பகுதியில் உள்ள திமுக ஒன்றிய வர்த்தகர் அணி அமைப்பாளர் கார்த்தி என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் இன்று ஒரு நாள் முழுவதும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூரில் இன்று ஒரு நாள் முழுவதும் உணவகத்தில் இலவசமாக பொது மக்களுக்கு உணவு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்.
 
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் 69 ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் திமுகவினர் பொது மக்கள் பயனடையும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என திமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தியிருந்தது. அந்தவகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் திமுகவினர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள்... பொதுமக்களுக்கு இலவச உணவு! கொண்டாடி தீர்த்த திமுகவினர்
திருவாரூர் அருகே புலிவலம் பகுதியில் திமுக ஒன்றிய செயலாளர் தேவா தலைமையில் புலிவலம் பகுதியில் உள்ள திமுக ஒன்றிய வர்த்தகர் அணி அமைப்பாளர் கார்த்தி என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் இன்று ஒரு நாள் முழுவதும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வை ஒன்றிய செயலாளர் தேவா தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து 69 கிலோ எடையுள்ள உதயசூரியன் அச்சிடப்பட்ட கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் புலிவளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகம் பேனா உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன அதுமட்டுமின்றி கொரோனா தொற்றினை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள்... பொதுமக்களுக்கு இலவச உணவு! கொண்டாடி தீர்த்த திமுகவினர்
இதேபோன்று கூத்தாநல்லூர் பகுதியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு வேஷ்டி சேலை மற்றும் மரக்கன்றுகள் வழங்கி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோன்று திருவாரூர் நகர் பகுதியில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஜினி சின்னா முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று திமுகவினர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Jet Crash: மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்..! நொடியில் பறிபோன 9 உயிர்கள் - முழு வீடியோ
மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்..! நொடியில் பறிபோன 9 உயிர்கள் - முழு வீடியோ
நெருங்கும் முரசு புயல் காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு கனமழை எச்சரிக்கை! இன்று வானிலை எப்படி இருக்கும்?q
நெருங்கும் முரசு புயல் காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை எப்படி இருக்கும்?
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிமுகவில்.. யார் இந்த வெள்ளைதுரை? இடைத்தேர்தலில் களமிறக்க இபிஎஸ் திட்டம்?
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிமுகவில்.. யார் இந்த வெள்ளைதுரை? இடைத்தேர்தலில் களமிறக்க இபிஎஸ் திட்டம்?
Chennai Rain: இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! சென்னைக்கு டேஞ்சர் அலர்ட்! முரசு புயல் குறித்து டெல்டா வெதர்மேன் பகீர்!
Chennai Rain: இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! சென்னைக்கு டேஞ்சர் அலர்ட்! முரசு புயல் குறித்து டெல்டா வெதர்மேன் பகீர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தீவிர புயலாக உருவெடுத்த முரசு..! இன்று மிக கனமழை எச்சரிக்கை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
தீவிர புயலாக உருவெடுத்த முரசு..! இன்று மிக கனமழை எச்சரிக்கை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Fishermen Alert: தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை..! 125KM வேகத்தில் சூறைக்காற்று
தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை..! 125KM வேகத்தில் சூறைக்காற்று
Chennai Rain: இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! சென்னைக்கு டேஞ்சர் அலர்ட்! முரசு புயல் குறித்து டெல்டா வெதர்மேன் பகீர்!
Chennai Rain: இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! சென்னைக்கு டேஞ்சர் அலர்ட்! முரசு புயல் குறித்து டெல்டா வெதர்மேன் பகீர்!
Jet Crash: மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்..! நொடியில் பறிபோன 9 உயிர்கள் - முழு வீடியோ
மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்..! நொடியில் பறிபோன 9 உயிர்கள் - முழு வீடியோ
School Leave: முரசு புயல்..! தொடர்ந்து கொட்டும் கனமழை - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முரசு புயல்..! தொடர்ந்து கொட்டும் கனமழை - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Tomato And Onion Price: பெட்டி பெட்டியாக தக்காளி.. மூட்டை மூட்டையாக வெங்காயம்.. காய்கறிகளின் நிலவரம் என்ன?
Tomato And Onion Price: பெட்டி பெட்டியாக தக்காளி.. மூட்டை மூட்டையாக வெங்காயம்.. காய்கறிகளின் நிலவரம் என்ன?
மஹிந்திரா XUV 3XO CNG எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது? ரியல் வேர்ல்ட் மைலேஜ் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ
மஹிந்திரா XUV 3XO CNG எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது? ரியல் வேர்ல்ட் மைலேஜ் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ
Chennai Rain: நள்ளிரவு முதல் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?
Chennai Rain: நள்ளிரவு முதல் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?
Embed widget