திருவாரூர்: இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட பக்ரீத் சிறப்பு திடல் தொழுகை !
இந்த நாளில் ஏழைகள் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக ஆடு, மாடுகளைக் குர்பானி கொடுத்து அதன் இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் கட்டளையிட்டுள்ளது.
திருவாரூரில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட பக்ரீத் சிறப்பு திடல் தொழுகை நடைபெற்றது.
திருவாரூர் மேட்டுபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட பக்ரீத் சிறப்பு திடல் தொழுகை தொழுகை நடைபெற்றது. இதில் அருகில் உள்ள விஜயபுரம் மேட்டுப்பாளையம் அலிவலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகை சுமார் 20ற்கு மேற்பட்ட மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் நடைபெற்றது. குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான வடபாதிமங்கலம், தண்ணீர்குண்ணம், பூதமங்கலம், மரக்கடை, நாகங்குடி, பொதக்குடி, அத்திக்கடை, அடவங்குடி குடவாசல், வாழ்க்கை சேங்கனூர், நன்னிலம், கொல்லாபுரம் போன்ற ஊர்களில் இந்த பக்ரீத் சிறப்பு திடல் தொழுகை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொருளாளர் சலீம் பெருநாள் உரை நிகழ்த்தினார் அதில் அவர் கூறியதாவது... இஸ்லாமிய மார்க்கத்தின் இரு பெருநாட்களும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டவை. நோன்புப் பெருநாளும், ஹஜ் பெருநாளும் ஏழைகளுக்கு தர்மம் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன. இந்த நாளில் ஏழைகள் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக ஆடு, மாடுகளைக் குர்பானி கொடுத்து அதன் இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் கட்டளையிட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழகமெங்கும் ஹஜ் பெருநாள் அன்று ஆடு, மாடுகள் அறுக்கப்பட்டு அதன் இறைச்சிகளை ஏழைகளுக்கு விநியோகம் செய்து வருகிறோம் அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான ஏழை குடும்பங்களுக்கு இறைச்சிகளை வழங்கி உள்ளோம் .
மேலும் இந்த ஆடு, மாடுகளின் தோல்களை விற்று அதிலிருந்து கிடைக்கும் தொகையைக் கொண்டு ஏழைகளுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி, மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு சேவைகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செய்து வருகின்றோம் குறிப்பாக பக்ரீத் பெருநாள் என்பது பிராணிகளை அறுத்து அதனை ஏழைகளுக்கு உணவாக அன்று ஒரு நாள் அளிக்கும் பொருட்டு கொண்டாடப்படுகிறது எனவும், அனைத்து சமுதாய மக்களிடமும் சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த நாளில் நிலைபெற வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு இந்த பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்தப்படுகிறது.இஸ்லாம் மார்க்கம் என்றாலே பிறர் நலன் நாடுவது என்கிற அடிப்படையில் அனைத்து சமுதாய மக்களும் பலன் பெற வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த பக்ரீத் கொண்டாடப்படுகிறது என இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். இதேபோன்று திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பக்ரீத் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தினர் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் அதிகாலை முதல் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சாரை சாரையாய் வருகை தந்து ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து பக்ரீத் திருநாளை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.