மேலும் அறிய

விடிய விடிய கொட்டிய கனமழை.. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் 
 
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம் தேதி தொடங்கியதிலிருந்து டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது குறிப்பாக கடந்த ஐந்து தினங்களாக திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. மேலும் திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் கடலோர மாவட்டங்களான புதுச்சேரி காரைக்கால் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நவம்பர் 3ஆம் தேதி கடலோர மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்றைய முன்தினம் இரவு தொடங்கிய மழை தற்போது வரை இடைவிடாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

விடிய விடிய கொட்டிய கனமழை.. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த சில தினங்களாக விட்டு விட்டு பெய்து வந்த மழை திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து தினங்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. நேற்றைய முன் தினத்தின் நள்ளிரவு முதல் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
 
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பொது மக்கள் வெளியில் செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர். மேலும் தரைக்கடை வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் மழையின் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில்  திருவாரூரில் 78.2 மில்லி மீட்டரும், நன்னிலத்தில் 66.2 மில்லி மீட்டரும், திருத்துறைப்பூண்டியில்  34.0 மில்லி மீட்டரும், குடவாசலில் 51.4 மில்லி மீட்டரும், நீடாமங்கலத்தில் 38.4 மில்லி மீட்டரும், மன்னார்குடியில் 40.0 மில்லி மீட்டரும், முத்துப்பேட்டையில் 30.2 மில்லி மீட்டரும் பாண்டவையாறு தலைப்பில் 50.4 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

விடிய விடிய கொட்டிய கனமழை.. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மேலும் தொடர் கனமழையின் காரணமாக நீடாமங்கலம் கோட்டூர் மன்னார்குடி உள்ளிட்ட கிராமங்களில்  அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்து உள்ளன இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர் இதேபோன்று தற்போது சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். 30 முதல் 45 நாட்கள் ஆன சம்பா பயிர்களுக்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா பயிர்கள் மழை நீரில் பயிர்கள் அனைத்தும் மூழ்கி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன மழை நீர் வடிந்தால் மட்டுமே பயிர்களை பாதுகாக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மழை நீரை வடியவிட்டு அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடிகால் வாய்க்கால்களை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தூர் வாரவேண்டும், தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோன்று கிராமப்புறங்களில் வீடுகளை சுற்றி அதிக அளவு மழைநீர் தேங்கி இருக்கிறது குறிப்பாக திருவாரூர் அருகே ஆண்டிபந்தல் பணங்குடி உள்ளிட்ட கிராமங்களில்  வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி இருக்கிறது இந்த மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். திருவாரூர் தாலுகாவிற்கு உட்பட்ட நடப்பூர் கிராமத்தில் ஆற்றில் கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் உட்புகுந்து வருகிறது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Breaking News LIVE 29th SEP 2024:  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Breaking News LIVE 29th SEP 2024: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Breaking News LIVE 29th SEP 2024:  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Breaking News LIVE 29th SEP 2024: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?
Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?
Sri Lanka Vs New Zealand:
Sri Lanka Vs New Zealand:"ஒரு சூறாவளி கிளம்பியதே" - நியூசிலாந்தை ஓட விட்ட இலங்கை! 15 வருடங்களுக்குப் பிறகு சாதனை
Embed widget