மேலும் அறிய

சான்றிதழ்களுக்கு அதிக கட்டணம் வசூல் - திருவாரூரில் இ-சேவை மையத்தில் கலெக்டர் திடீர் ரெய்டு..!

அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக தொகை வசூலிப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் வந்ததையடுத்து, ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அதிரடியாக தனியார் இ-சேவை மையத்தில் நுழைந்து சோதனை நடத்தினார். 

திருவாரூர் மாவட்டம் ஏழைகள் விவசாயக் கூலி தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம். அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான  சான்றிதழ்களை பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய சூழ்நிலை நிலவியதால் தனியார் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை எளிதாக பெற்றுக் கொள்வதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன் அடிப்படையில் அரசு நிர்ணயம் செய்த தொகையினை தனியார் இ-சேவை மையங்களில் செலுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் விளமல் பகுதியில் இயங்கி வரும் அன்னை சிஸ்டம்ஸ் என்கிற தனியார் இ-சேவை மையத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ்,  இறப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் விதவை சான்றிதழ், வில்லங்கச் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம்  போன்ற பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கு அரசு நிர்ணயித்த தொகையான 60 ரூபாயை விட அதிக தொகை வசூலிப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் வந்ததையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அதிரடியாக அன்னை சிஸ்டம்ஸ் தனியார் இ-சேவை மையத்தில் நுழைந்து சோதனை நடத்தினார். 


சான்றிதழ்களுக்கு அதிக கட்டணம் வசூல் - திருவாரூரில் இ-சேவை மையத்தில் கலெக்டர் திடீர் ரெய்டு..!

இதில், அந்த தனியார் இ-சேவை மையத்தில் எந்த சேவைக்கு எவ்வளவு பணம் வசூலிக்கப்படும் என்கிற உரிய அறிவிப்பு பலகை ஏதும் இல்லை. மாவட்ட ஆட்சியர் அங்கிருந்த ஆவணங்களை சோதனை செய்தார். அங்கு சான்றிதழ் விண்ணப்பிக்க வந்திருந்த பொதுமக்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன் தலைமையில் இந்த தனியார் இ-சேவை மையத்தில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும் அனைத்து இ-சேவை மையங்களிலும் வசூலிக்கப்படும் தொகை குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். உரிய விசாரணைக்கு பின் இந்த தனியார் இ-சேவை மையம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். 


சான்றிதழ்களுக்கு அதிக கட்டணம் வசூல் - திருவாரூரில் இ-சேவை மையத்தில் கலெக்டர் திடீர் ரெய்டு..!

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து இ-சேவை மையங்களும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற விண்ணப்பிப்பதற்கு அறுபது ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்துள்ளது. நான் சில தனியார் இ-சேவை மையங்கள் அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக தொகை வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. குறிப்பாக விளம்பர பகுதியில் இயங்கி வரும் இந்த அன்னை சிஸ்டம்ஸ் தனியார் இ சேவை இணையத்தில் அரசு நிர்ணயித்த தொகை விட அதிக தொகை வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து தற்போது இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இ-சேவை மையங்களிலும் சான்றிதழ்களை விண்ணப்பிப்பதற்கு அரசு நிர்ணயித்த தொகை எவ்வளவு என்பதை அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அரியலூரில் துப்புரவு தொழிலாளர்கள் திடீர் போராட்டம்...  வீதிகளில் தேங்கிய குப்பைகளால் துர்நாற்றம்
அரியலூரில் துப்புரவு தொழிலாளர்கள் திடீர் போராட்டம்...  வீதிகளில் தேங்கிய குப்பைகளால் துர்நாற்றம்
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
தஞ்சாவூரில் அக்.7-ல் 8 மணி நேரம் மின்தடை! செல்போன் சார்ஜ் முதல் தண்ணீர் வரை முன்கூட்டியே தயார் செய்துக்கோங்க!
தஞ்சாவூரில் அக்.7-ல் 8 மணி நேரம் மின்தடை! செல்போன் சார்ஜ் முதல் தண்ணீர் வரை முன்கூட்டியே தயார் செய்துக்கோங்க!
குறைந்த விதை... குறைந்த தண்ணீர்... ஏக்கருக்கு 76 டன் கரும்பு: நவீன சாகுபடி முறையை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை
குறைந்த விதை... குறைந்த தண்ணீர்... ஏக்கருக்கு 76 டன் கரும்பு: நவீன சாகுபடி முறையை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
Kia Sorento: கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Embed widget