மேலும் அறிய

பைபாஸ் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் என மக்கள் அச்சம்

இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பைக்குகள், கார், சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் என்று இந்த பைபாஸ் சாலை வழியாக திருவையாறு மற்றும் கும்பகோணத்திற்கு செல்கின்றன.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திருவையாறு பைபாஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது பைபாஸ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி 2 கட்டமாக பைபாஸ் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. தஞ்சை மேலவஸ்தாசாவடியில் இருந்து தொடங்கி மாதாக்கோட்டை, விளார், வழியாக புதுப்பட்டினம், பட்டுக்கோட்டை பிரிவு சாலை, மாரியம்மன்கோவில் சாலையில் உள்ள ரவுண்டானா, வெண்ணாறு பாலம், பள்ளியக்ரஹாரம் ரவுண்டானா, திருவையாறு பிரிவு சாலை, 8-ம் நம்பர் கரம்பை, பிள்ளையார்பட்டி ரவுண்டானா வழியாக மாவட்ட எஸ்.பி., அலுவலகம் அருகே உள்ள திருச்சி சாலையில் நிறைவடையும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முதல் கட்டமாக மேலவஸ்தாசாவடியில் இருந்து பள்ளியக்ரஹாரம் ரவுண்டானா வரை ஒரு கட்டமாகவும், அங்கிருந்து தற்போது தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருச்சி சாலையில் இணைக்கும் வகையில் 2-வது கட்டமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருச்சியில் இருந்து தஞ்சையை கடந்து செல்பவர்கள் தஞ்சை மாநகருக்குள் வந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல் இருக்கும் வகையில் இந்த பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை பணிகளும் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பைக்குகள், கார், சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் என்று இந்த பைபாஸ் சாலை வழியாக திருவையாறு மற்றும் கும்பகோணத்திற்கு செல்கின்றன. இந்த பைபாஸ் சாலையில் 8 நம்பர் கரம்பை பகுதியில் ஒரு மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமான பைபாஸ் சாலையாக இருப்பதால் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில் இந்த சாலையில் வண்ணாரப்பேட்டை கல்லணைக்கால்வாய் ஆற்றுப்பாலம் பகுதியில் பொதுமக்கள் வளர்க்கும் மாடுகள் மேய்ச்சலுக்கு வருகின்றன.  சில நேரங்களில் இந்த மாடுகள் பைபாஸ் சாலையில் திடீரென்று வாகனங்கள் வரும் போது கடக்கின்றன. மேலும் அதேபகுதியில் சுற்றியும் திரிகின்றன. மேலும் ஒன்றுடன் ஒன்று சாலையிலேயே மோதிக் கொண்டு வாகனங்கள் குறுக்கே ஓடுவதால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே திருவையாறு பைபாஸ் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
தஞ்சாவூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி: மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
தஞ்சாவூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி: மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை இஃப்தார் கொண்டாட்டம்: 2000 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை இஃப்தார் கொண்டாட்டம்: 2000 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC Menstrual: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
SC Menstrual: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
Embed widget