மேலும் அறிய
பைனான்சியர் வெட்டி படுகொலை - வேளாங்கண்ணியில் உறவினர்கள் சாலை மறியல்
வேளாங்கண்ணியில் முன் விரோதம் காரணமாக பைனான்சியர் வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

உறவினர்கள் போராட்டம்
வேளாங்கண்ணியில் முன் விரோதம் காரணமாக பைனான்சியர் வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பரவை சந்தை அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபல பைனான்சியர் டிவிஆர் மனோகரை முன் விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் படுகொலை செய்து தப்பி சென்றனர். வேளாங்கண்ணி முச்சந்தி உள்ள அவரது அலுவலகத்தில் இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றது குறித்து நாகை எஸ்பி அங்குள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மனோகரனின் உறவினர்கள் மற்றும் தெற்கு பொய்கை நல்லூர் கிராம மக்கள் நாகை அடுத்துள்ள பரவை சந்தை அருகே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக அங்கு நாகை ஏடிஎஸ்பி சுகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது ஏடிஎஸ்பி சுகுமார் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை ஒரு மணி நேரத்திற்கு பின் தற்காலிகமாக விலக்கிக் கொண்டனர். வேளாங்கண்ணியில் பிரபல பைனான்சியர் படுகொலை செய்த சம்பவத்தில் அவரது உறவினர்களும் கிராம மக்களும் நடத்திய சாலை மறியல் போராட்டம் காரணமாக வேளாங்கண்ணி நாகை கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement