மேலும் அறிய
Advertisement
திருவாரூர்: இது எதிர்காலத்துக்கானது.. ஒரு லட்சம் பனைவிதைகளுடன் களமிறங்கிய கிராம மக்கள்!
ஒரு லட்சம் பனை விதைகளை நட தொடங்கிய கிராம மக்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமப் புறங்களில் பணிவிதைகளை நட வேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு உதவிகள் செய்து தரப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தமிழ்நாடு அரசுக்கு நன்றியையும் வரவேற்பையும் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமங்களில் பணிவிதைகள் நடும் பணிகளில் தன்னார்வ அமைப்பினர், ஊராட்சி நிர்வாகத்தினர், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு பகுதிகளில் பனை விதைகளை நட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் மண்ணரிப்பைத் தடுக்கும் வகையில் சாலையின் ஓரங்களில் மற்றும் குடிமராமத்து செய்யப்பட்ட குளக்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பனை விதை நடவு செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் தங்கள் வருங்கால சந்ததியினருக்காக பனை விதை பெருமளவில் நடவு செய்திட ஏதுவாக தங்கள் சுற்றுவட்டாரத்தில் கிடைக்கும் பனை விதைகளை சேகரித்து தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு செப்டம்பர் மாதத்தில் 10 லட்சம் பனை விதைகள் பெருமளவில் நடப்பு செய்திட திட்டமிடப்பட்டு உள்ளது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்திரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க கிராமம் முழுவதும் 1 லட்சம் பனைவிதைகளை நடும் பணியில் ஒரு கிராம மக்கள் இறங்கியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பெரும்புகளூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஐயப்பன் தலைமையில் அந்த பகுதி கிராம மக்கள் நீர்நிலைகள் ஓரமாக ஒரு லட்சம் படை விதைகளை நட தொடங்கி உள்ளனர். கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் பகுதிகளிலும் பணிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
பனை விதைகள் நடுவது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஐயப்பன் கூறுகையில், ''தமிழ்நாடு முதலமைச்சர் சட்டசபையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமப்புறங்களிலும் நீர்நிலைகள் ஓரமாக பணிவிடைகளை நட வேண்டும் என தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் எங்கள் பெரும்புகளூர் ஊராட்சி முழுவதும் ஒரு லட்சம் பணிவிதைகளை இந்த மாதத்தில் நடவு செய்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, இன்று முதல் பனை விதைகளை நட்டு வருகிறோம். இந்த பனை விதைகள் நடுவதன் மூலமாக இயற்கை பேரிடர்களில் எங்கள் பகுதி மிகுந்த பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். பனைமரங்கள் எவ்வளவு காற்று அடித்தாலும் எளிதில் சாயக்கூடிய மரங்கள் அல்ல. அது மட்டுமின்றி பனைமரங்களில் இருந்து ஏராளமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. எங்கள் பகுதியில் நடும் பனை விதைகள் மூலமாக அது மரமான பின்னர் அதன் மூலம் வரும் மூலப் பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் எங்கள் பகுதி மக்கள் மூலமாகவே விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' எனவும் ஊராட்சி மன்ற தலைவர் ஐயப்பன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
கோவை
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion