மேலும் அறிய

பள்ளிக்கு வந்த பின்னர் விடுமுறை அளித்து பயன் என்ன ? - மயிலாடுதுறையில் பெற்றோர்கள் அதிருப்தி

விடுமுறை குறித்து காலை 8 மணிக்கு மேல்தான் அறிவிப்பு வெளியான நிலையில் கிராமப்புற மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்து மழையில் நனைந்து கடும் சிரமத்துடன் பள்ளிகளுக்கு வந்து விடுகின்றனர்

தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்துடன் வடகிழக்குப் பருவமழை முடிவுற்ற நிலையிலும் டெல்டா மாவடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்று முன் தினம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.  காலை முதலே மாவட்டத்தின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் இன்று  இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பள்ளிக்கு வந்த பின்னர் விடுமுறை அளித்து பயன் என்ன ? -  மயிலாடுதுறையில் பெற்றோர்கள் அதிருப்தி

இதனை சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை தொடங்கிய திடீர் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோயில், மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர், வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, கொள்ளிடம், திருமுல்லைவாசல், பூம்புகார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை லேசான மழையாக தொடங்கி அவ்வப்போது பலத்த மழையாக பெய்து வருகிறது. 

பள்ளிக்கு வந்த பின்னர் விடுமுறை அளித்து பயன் என்ன ? -  மயிலாடுதுறையில் பெற்றோர்கள் அதிருப்தி

இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வழக்கம்போல விடுமுறை அளிப்பதில் மாவட்ட ஆட்சியர் காலதாமதம் செய்வதாக பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மழை காலத்தின் போதும் பள்ளி மாணவர்கள்  மழையில் நனைந்து கடும் சிரமத்துடன் பள்ளிகளுக்கு சென்ற பின்னரே விடுமுறை அளித்து வந்த ஆட்சியர்,  தற்போது பெய்து வரும் கனமழையில் பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகள் மழையில் நனைந்து பள்ளி வந்த பின்னரே விடுமுறை அளிப்பது பெற்றோர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கு வந்த பின்னர் விடுமுறை அளித்து பயன் என்ன ? -  மயிலாடுதுறையில் பெற்றோர்கள் அதிருப்தி

விடுமுறை குறித்து காலை 8 மணிக்கு மேல்தான் அறிவிப்பு வெளியாகிறது. என்றும், இதனால் கிராமப்புறங்களில் இருந்து பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் காலையை புறப்பட்டு மழையில் நனைந்து கடும் சிரமத்துடன் பள்ளிகளுக்கு வந்து விடுகின்றனர். அதன் பின்னர் வெளியாகும் விடுமுறை அறிவிப்பால் மீண்டும் மழையில் நனைந்து பள்ளிகளுக்கு சென்று வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது.   உள்ளூர் மாணவர்கள் பலர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது தெரிந்து பாதி வழியில் வீடு திரும்புகின்றனர். அதிகாலை முதலே மழை பெய்து வரும் நிலையில்  முன்னதாகவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தால் பேருந்தில் காலையிலேயே கொட்டும் மழையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் சிரமத்தைக்  தவிர்க்க முடியும் என்று  சமூக ஆர்வலர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பள்ளிக்கு வந்த பின்னர் விடுமுறை அளித்து பயன் என்ன ? -  மயிலாடுதுறையில் பெற்றோர்கள் அதிருப்தி

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலை 8.10 மணிக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்டார். பின்னர் 8.30 மணி அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் கல்லூரிகளில் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறும் என்ற அறிவிப்பு தாமதமாக வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில் கிராமப்புறங்களில் இருந்து பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது.

பள்ளிக்கு வந்த பின்னர் விடுமுறை அளித்து பயன் என்ன ? -  மயிலாடுதுறையில் பெற்றோர்கள் அதிருப்தி

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துவிட்டு பின்னர் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகள் உண்டு என்ற அறிவிப்பு தாமதமாக வெளிடப்பட்டதால் மாணவ மாணவிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என்று பள்ளிகளின் வாயிலில் பள்ளி நிர்வாகத்தினர் போர்டில் எழுதி மாணவர்களின் பார்வைக்கு வைத்தனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெளிவான அறிவிப்பையும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பை முன்கூட்டியே வெளிட்டு மாணவர்களின் சிரமத்தை போக்க வேண்டும் என்று பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget