ஒன்றுபட்ட அதிமுக கூட்டணிதான் வெற்றி பெறும்... வைத்திலிங்கம் திட்டவட்டம்
2026 தேர்தலில், ஒன்றப்பட்ட அ.தி.மு.க., கூட்டணி தான் வெற்றி பெறும் என ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.,வும், ஓ.பி.எஸ்., ஆதரவாளருமான வைத்திலிங்கம் தெரிவித்தார்.

தஞ்சாவூர்: வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒன்றப்பட்ட அ.தி.மு.க., கூட்டணி தான் வெற்றி பெறும் என்று ஓ.பி.எஸ். ஆதரவாளரும், ஒரத்தநாடு எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக இப்போது அரசியல் கட்சிகள் களம் இறங்கி உள்ளன. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கி விட்டார், கடந்த மாதத்தில் டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். தற்போது பாஜகவுடன் அதிமுக தேர்தல் கூட்டணி அமைத்துள்ளது.
இந்நிலையில் சிதறிக்கிடக்கும் அதிமுகவினர் ஒன்றிணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்களுக்கு அதிமுகவில் இடமில்லை என்று தெரிவித்து வருகிறார். இவ்வாறு பரபரவென்று சூடு பிடித்து வரும் அரசியல் களத்தில் எப்போது என்ன நடக்கும் என்றே யாருக்கும் தெரியாது. இவ்வாறு செல்லும் தேர்தல் பரபரப்பில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்திலிங்கம் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா?
2026 தேர்தலில், ஒன்றப்பட்ட அ.தி.மு.க., கூட்டணி தான் வெற்றி பெறும் என ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.,வும், ஓ.பி.எஸ்., ஆதரவாளருமான வைத்திலிங்கம் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு நுாலகத்தின் அருகே, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடியே 35 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயில், அறிவுசார் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக்கொண்ட ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.,வும், ஓ.பி.எஸ்., ஆதரவாளமான வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க., தொண்டர்கள் 2 கோடி பேர் உள்ளதாக பழனிசாமி கூறி வருகிறார். ஆனால், 80 லட்சம் ஓட்டுகள் தான் அ.தி.மு.க.,வாங்கியது. சிதறி கிடக்கும் அ.தி.மு.க.,வின் உண்மையான தொண்டர்கள் சுமார் ஒன்றரை கோடிக்கு மேல் உள்ளோம். அத்தனை தொண்டர்களில் 99 சதவீதம் பேர் அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என நினைக்கிறார்கள். அந்த தொண்டர்களின் எண்ணம் விரைவில் நிறைவேறும். 2026 தேர்தலில், ஒன்றப்பட்ட அ.தி.மு.க., கூட்டணி தான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.





















