15 கோடி கி.மீ., தொலைவில் உள்ள சூரியனை பார்த்து ரசித்த மக்கள் - மாணவர்களின் வானியல் சாதனை
சீர்காழியில் தனியார் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய தொலைநோக்கி மூலம் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுபம் வித்யா மந்திர் தனியார் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி ஆண்டு விளையாட்டு விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விளையாட்டு விழாவை காண ஏராளமான பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பள்ளியில் வருகை புரிந்திருந்தனர்.
விளையாட்டு விழாவை காண வந்தவர்களுக்கு மேலும் ஒரு அற்புத நிகழ்வான வானியல் மாற்றத்தை பார்ப்பதற்காக வாய்ப்பு அமைந்தது. சுபம் வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய வானிலாவிய தொலைநோக்கி மூலமாக 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சூரியனை பார்த்து மகிழ்ந்தனர். மேலும், சூரியனில் உள்ள கரும்புள்ளிகளையும், சூரியனை பற்றி தெரிந்து கொள்ள மாணவர்கள் உருவாக்கிய தொலைநோக்கி பள்ளி வளாகத்தில் வைத்துள்ள பள்ளி நிர்வாகம் அதன் மூலம் சூரியனில் நிகழும் நிகழ்வுகளை பொதுமக்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.
Sivagangai: சுறா முள்ளில் வாள், தமிழரின் வளரி, கொம்பு போன்ற ஈட்டி - அரண்மனை சிறுவயல் ஆச்சரியம்
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரும் தொலைநோக்கி மூலமாக சூரியனை பார்த்து மகிழ்ந்தனர். சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் ஒவ்வொன்றும் ஆறு பூமிகளை உள்ளடக்கிய அளவிற்கு பெரிய கரும்புள்ளி என்றும், அது குறித்து மேலும் பல தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானி விளக்கம் அளித்தார். அதன் மூலம் சூரியன் குறித்து பல புதிய அறிய தகவல்களை தெரிந்து கொண்டனர். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “சூரியனை நேராக கண்ணில் பார்க்க முடியாது, தற்போது தொலைநோக்கி மூலமாக பார்த்து அதில் உள்ள விவரங்களை தெரிந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே இதனை காண முடியும் என்ற நிலைமை மாறி தற்போது இது போன்ற சின்ன சிறு ஊர்களிலும் காண செய்வது பாராட்டுதலுக்குறியது என பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர். இளம் வயதிலே கிராமப்புற பள்ளி மாணவர்கள் தொலைநோக்கியை உருவாக்கியதை நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டினர். இந்த தகவலை அறிந்து தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் சூரியனை காண ஆவலுடன் திரண்டனர்.