Crime : 40 பெண்களிடம் அத்துமீறல்.. அந்தரங்க உறுப்புகளின் வீடியோ.. பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் செய்த கொடூரம்..
இளம்பெண்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்த பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Crime : இளம்பெண்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்த பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 பெண்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி தொல்லை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பையைச் சேர்ந்த 27 வயதுடைய மன்சூலே என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். அதன்படி, ”சிறுவயதிலேயே பள்ளி படிப்பை பாதியிலேயே மின்சூலே நிறுத்திவிட்டார். பெற்றோர் இறந்த பிறகு தனது சகோதரர்களுடன் புனேவில் வாழ்ந்து வந்துள்ளார். மன்சூலே பகுதி நேர வேலையாக பிளிப்கார்ட் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை செய்து வந்திருந்தார்.
சமூக வலைதளங்களில் மன்சூலே வேலை தேடும் இணையதள கணக்குகளை கண்டுபிடிப்பார். பின்பு, அவர் அந்த கணக்குகளில் உள்ள குழுக்களில் வேலை தேடும் நபர் போல இணைந்துள்ளார். பின்னர், அந்த குழுக்களில் உள்ள பெண்களை மட்டும் தேர்வு செய்து அவர்களுடன் வேலை சம்பந்தமாக பேசத் தொடங்குவார். பின்னர், திடீரென ஆபாச வீடியோக்களை அனுப்பி பல பெண்களிடம் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக விசாரணையில் தெரிந்தது.
ஆபாச வீடியோக்களை அனுப்பி பெண்களிடம் தவறாக பேசி கொண்டுவந்துள்ளார். மேலும், வீடியோ கால் செய்தும் தொந்தரவு செய்து வந்துள்ளார். வீடியோ கால்களை கட் செய்யும் பெண்களை மிரட்டுவார் என்று கூறப்படுகிறது. இதுவரை சுமார் 40 பெண்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு கொடுத்தாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மற்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மன்சூலே என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரிக்கும் குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்துக்கு சுமார் 31 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில் இதுவே அதிமாகும். கடந்த 2014ல் 30,906 புகார்கள் மகளிர் ஆணையத்தில் பதிவாகி உள்ளது. நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் 16,876 புகார்கள் கிடைக்கப் பெற்றன. இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 3,004 புகார்கள் கிடைக்க பெற்றன. மூன்றாவது இடமாக மகாராஷ்ராவில் 1,381 புகார்கள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Crime Iphone Delivery boy: ஐஃபோனுக்கு கொடுக்க காசில்ல.. டெலிவரி பாயை கொன்று எரித்த கொடூரம்..