மேலும் அறிய

பாதாளசாக்கடை திட்ட பணிகளை சைக்கிளில் சுற்றி பார்வையிட்ட மயிலாடுதுறை நகராட்சி ஆணையர்

மயிலாடுதுறையில் நகராட்சியில் நடைபெறும் பணிகளை ஆணையர் சைக்கிளில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை நகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் க.பாலு. இவர் நகர்ப் பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை சீரமைப்பு மற்றும் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய திட்டமிட்டி இருந்தார். அதன்படி நகராட்சி ஆணையர் பாலு காலை வாகனங்களை தவிர்த்து சைக்கிளில் சென்று பணிகளை பார்வையிட்டார். 

பாதாளசாக்கடை திட்ட பணிகளை சைக்கிளில் சுற்றி பார்வையிட்ட மயிலாடுதுறை நகராட்சி ஆணையர்

நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஆணையர் பாலு, முதலில் கண்ணாரத் தெரு முக்கூட்டு பகுதியில் நடைபெற்று வந்த பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகளை  பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியாற்றிய ஊழியர்களிடம் பாதுகாப்பாகவும், துரிதமாகவும் பணியை முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்  அங்கிருந்து சைக்கிளில் புறப்பட்டு கூறைநாடு கிட்டப்பா மேல்நிலைப் பள்ளிக்கு அருகே கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4 ஏக்கர் நிலப்பரப்பில் மினி ஸ்டேடியம் அமைய உள்ள இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பள்ளி தலைமையாசிரியர் அன்புச்செழியனையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  

Chennai Corporation Budget : சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு - சென்னை மேயர் பிரியா அறிவிப்பு

பாதாளசாக்கடை திட்ட பணிகளை சைக்கிளில் சுற்றி பார்வையிட்ட மயிலாடுதுறை நகராட்சி ஆணையர்

இந்த ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் சணல்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். பெட்ரோல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உயர்ந்து வரும் நிலையில் பொருளாதார சிக்கனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு சைக்கிள் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் தான் சைக்கிளில்  சென்று பணிகளை பார்வையிட்டது. பொதுமக்கள் மத்தியில் சைக்கிள் ஓட்டுவதன் மீது உள்ள ஆர்வத்தை அதிகரிக்கும் விதத்தில் அமைந்தது.

பாதாளசாக்கடை திட்ட பணிகளை சைக்கிளில் சுற்றி பார்வையிட்ட மயிலாடுதுறை நகராட்சி ஆணையர்

இந்தியாவில் இப்படியெல்லாம் அந்நிய சக்திகள் தலையிட முடியாது” - உடைந்து அழுத பாகிஸ்தான் பிரதமர்

மேலும் ஒரு சில பொதுமக்கள் நகராட்சி ஆணையருக்கே  பெட்ரோல், டீசல் உயர்வு பாதிப்பு என்றால், ஏழை எளிய அன்றாட கூலிவேலை செய்யும் எங்களைப் போன்றவர்களின் நிலை என்ன என அவர்களுக்குள்ளே கேள்வி எழுப்பிக் கொண்டு சென்றனர். நீண்ட நெடு தூரம் செல்பவர்களுக்கு சைக்கிளில் பயணம் மேற்கொள்ள முடியாது என்றும், பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிவாயு விலையை உடனடியாக அரசு கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் காய்கறி உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களின் வாடகை உயர்ந்து சாமானிய மனிதன் மிகுந்த இன்னலுக்கு ஆளாவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget