மேலும் அறிய

ரஜினியின் ‘பாட்ஷா’ பட பாடலை மேற்கோள் காட்டி மாணவர்களிடம் உரையாடிய அமுதவல்லி ஐஏஎஸ்

மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ரஜினியின் பாட்ஷா பட பாடல் வரிகளை கூறி  மாணவர்கள் 8 வயதிலிருந்து 16 வயது வரை முழு நேர கல்வி பயில வேண்டும் என அறிவுறுத்தினார்.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மக்களுக்கு பல்வேறு எண்ணற்ற திட்டங்களை புதிதாக அறிமுகப்படுத்தியும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த பல்வேறு அரசு திட்டங்களில் திருத்தங்கள் மேற்கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் "ஓயா உழைப்பின் ஓராண்டு" எனும் தலைப்பின் கீழ் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மாவட்டம் தோறும் அரசு நல திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி மற்றும் மக்கள் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயில் நந்தவனத்தில் கடந்த 15 -ம் தேதி காலை புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது.


ரஜினியின் ‘பாட்ஷா’ பட பாடலை மேற்கோள் காட்டி மாணவர்களிடம் உரையாடிய அமுதவல்லி ஐஏஎஸ்

புகைப்பட கண்காட்சியினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். இந்நிகழ்வில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். புகைப்பட கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு திட்டங்கள் துவக்கி வைத்தல் குறித்த புகைப்படங்களும், அரசு திட்டங்கள் குறித்த விளம்பரங்களும் மேலும் அது குறித்த பொதுமக்கள் அறிந்து கொள்ள வகையில் துறை சார்ந்த அலுவலர்களின் அரங்குகளில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல் உள்ளிட்டவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து 24 ஆம் தேதி இரவு 9 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது. தொடர்ந்து ஏழாம் நாள் கண்காட்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குனர் அமுதவல்லி ஐஏஎஸ் கலந்துகொண்டு பார்வையிட்டார். பின்னர்  பள்ளி மாணவ மாணவிகளுக்கு மஞ்சள் பை , மரக்கன்றுகளை வழங்கினார்.

Gold, Silver Price: ஹேப்பி நியூஸ் மக்களே...தங்கம் விலையில் மாற்றமில்லை...இன்றைய நிலவரம் இதுதான்..


ரஜினியின் ‘பாட்ஷா’ பட பாடலை மேற்கோள் காட்டி மாணவர்களிடம் உரையாடிய அமுதவல்லி ஐஏஎஸ்

அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், “ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படத்தில் எட்டு எட்டாய் மனித வாழ்வை பிரித்துக்கொள் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப குழந்தைகள் முதல் எட்டு வயது வரை விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து சந்தோசமாக விளையாட வேண்டும், அதற்கு அடுத்ததாக எட்டு வயதிலிருந்து 16 வயது வரை முழு நேரம் கல்வி பயின்று பெற்றோர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். மாணவர்கள் தாங்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், மருத்துவர், வக்கீல் ஆக வேண்டும் என்ற கனவை நிர்ணயித்து அதனை அடைய மாணவர்கள் சிறப்பாக படிக்க வேண்டும்” என்றார்.

Women T20 WC Semi-Final: இனிதான் ஆட்டம் ஆரம்பம்.. வெற்றிக்காக 100% போராடுவோம்.. கம்பீரமாக சொன்ன ஹர்மன்பிரீத் கவுர்!


ரஜினியின் ‘பாட்ஷா’ பட பாடலை மேற்கோள் காட்டி மாணவர்களிடம் உரையாடிய அமுதவல்லி ஐஏஎஸ்

மேலும், பிளாஸ்டிக்கை தவிர்க்க மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும், ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு மரம் நட்டு வைத்து அதை வளர்க்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, கோட்டாட்சியர் யுரேகா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tamil Nadu Next DGP : ’ஓய்வு பெறும் சைலேந்திரபாபு’ தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்..? – ரேசில் 3 பேர்..!

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Nissan Tekton: 5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் SUV எப்படி இருக்கு?
5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் எஸ்யுவி எப்படி இருக்கு?
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
Embed widget