ஐப்பசி முதல் நாள்- மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடிய பக்தர்கள்...!
’’ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் ஆலயத்திலிருந்து தினந்தோறும் சாமி புறப்பாடு நடைபெற்று, துலாக்கட்டக் காவிரியில் புனித நீராடி தீர்த்தவாரி நடைபெறும்’’
காலம் காலமாக நாள்தோறும் இந்து மதத்தினர் தங்களது வாழ்நாள் பாவங்களை போக்கி கொள்ள கங்கையில் நீராடி வருகின்றனர். இதனால் தனது புனித தன்மையை கங்கை இழந்த நேரத்தில் தன் பாவங்களை போக்குவதற்கு இறைவனை வேண்டியுள்ளது. அப்போது இறைவன், மாயூரம் சென்று அங்கே செல்லும் காவிரியில் நீராடினால் உன் பாவங்கள் அனைத்தும்போகும் என்றும் கூறியதாகவும், இறைவனது வாக்கினை ஏற்று கங்கையானவள் மயிலாடுதுறை வந்து ஐப்பசி மாதத்தில் மாயூரம் துலாக்கட்டக் காவிரியில் இறங்கி புனித நீராடி தனது பாவங்களை போக்கிக்கொண்டதாகவும், கங்கை நதியுடன் அனைத்து புண்ணிய நதிகளும் மாயூரம் துலாக்கட்டக் காவிரியில் இறங்கி புனிதநிராடியதாக ஐதீகம்.
ராமநாதபுரம்: பரமக்குடி அருகே போலீஸ்காரருடன் கள்ளக்காதல் - மகளை எரித்து கொன்ற பெற்றோர்
அதன் நிகழ்வாக ஆண்டுதோறும் ஐப்பசி முதல் நாளில் மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரியில் பக்தர்கள் புனித நீராட ஆரம்பித்து, ஐப்பசி 30 இறுதிநாளில் கடைமுழுக்கு விழாவாக நிறைவு செய்வது வழக்கம். அதன் காரணமாக கடைமுழுக்கு தீர்த்தவாரி அன்று மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்து வருகிறது.
Maanaadu Release Date: தீபாவளி ரேஸில் இருந்து விலகிய ‘மாநாடு’ - மீண்டும் சிம்புவுக்கு சோதனையா?
தமிழ்நாட்டில் காவிரி ஆறு ஓடும் இடங்களில் எல்லாம் பக்தர்கள் புனித நிராடினாலும், மயிலாடுதுறை துலாக்கட்டக்காவிரியில் புனித நீராடுவது தனிசிறப்பு. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த ஐப்பசி மாதத்தில் புனித நீராடி வருகின்றனர். குறிப்பாக கடைமுழுக்கு தீர்த்தவாரியான ஐப்பசி 30 ஆம் தேதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு ஒன்று கூடி புனித நீராடுவார்கள். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு அனுப்பி அளிக்கும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட இங்கு திரள்வார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
NaaneVaruven | விறு விறுப்பாக நடக்கும் ‘நானே வருவேன் ‘ ஷூட்டிங் ! - சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர்!
மேலும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் ஆலயத்திலிருந்து தினந்தோறும் சாமி புறப்பாடு நடைபெற்று, துலாக்கட்டக் காவிரியில் புனித நீராடி தீர்த்தவாரி நடைபெறும் இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபடுவார்கள்.
மயிலாடுதுறையில் 100ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி - ஆசிர்வாதம் வாங்கிய எம்.எல்.ஏ