மயிலாடுதுறையில் 100ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி - ஆசிர்வாதம் வாங்கிய எம்.எல்.ஏ
’’கண் பார்வை மிகவும் கூர்மையாக உள்ளதால் இந்த வயதான காலத்திலும் கண்ணாடி அணிவது கிடையாது’’
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தர்க்காஸ் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு என்பவரின் மனைவி 100 வயதான கமலத்தம்மாள் பாட்டி. இவரது கணவர் கோவிந்தராசு கடந்த 1994 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அதனை தொடர்ந்து கமலத்தம்மாளுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள் கொள்ளு பேரன், எள்ளு பேரன், குழந்தைகள் என சுமார் 50 உறவினர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தர்க்காஸ் கிராமத்தில் அனைவருக்கும் பரிச்சயமான கமலத்ம்மாள் அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர் கூட, இதன்காரணமாக அவரது 100 வது வயது துவங்கியதை ஒட்டி குடும்பத்தினர், மற்றும் கிராம மக்கள் சார்பில் 100 வது பிறந்த நாள் விழா கொண்டாட முடிவுசெய்தனர்.
அதனை அடுத்து அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி, இனிப்பு வழங்கியும் விருந்து உபசரிப்பு செய்தும் பிறந்தநாள் விழாவை வெகு விமர்சியாக கொண்டாடினர். மேலும் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் 100 வது பிறந்தநாள் காணும் கமலத்தம்மாளை இதுவரை எந்த நோயும் எட்டிக்கூட பார்க்கவில்லை. கொரோனா காலத்தில்கூட கொஞ்சம் கூட அஞ்சாமல் மகிழ்ச்சியாக அந்த நோய் தொற்று ஏற்படாமல் விரட்டி அடித்து உள்ளார். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் எந்த நோயும் இல்லாதவர். கண் பார்வை மிகவும் கூர்மையாக உள்ளதால் இந்த வயதான காலத்திலும் கண்ணாடி அணிவது கிடையாது. இதுவரை மருத்துவமனைக்கு சென்றதும் கிடையாது என்றும், மருந்து சாப்பிட்டதும் இல்லை என்கிறார் கமலத்தம்மாள். இருந்தும் திடகாத்திரத்துடனும் மன நிறைவுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
Happy Birthday Jyothika: ஜோஷ் மாறாத ஜோதிகாவுக்கு இன்று பிறந்தநாள் - நடிப்பு ராட்சசி ஏன் ஸ்பெஷல்?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும் ஆச்சரியமூட்டும் செய்தி என்னவென்றால் இந்த வயதிலும் சைவம் மற்றும் அசைவ உள்ளிட்ட எந்த உணவு சாப்பிட்டாலும் எளிதில் ஜீரணம் அடைந்து விடுகிறதாம் இதனால் வயதானவர்கள் உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடிப்பதில்லை. இந்த சூழலில் நேற்று பிறந்த நாள் விழா காண்ட கோவிந்தம்மாள் வீட்டிற்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் தர்க்காஸ் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை நேரில் வந்து ஆசி பெற்று சென்றனர். கோவிந்த கமலத்தம்மாளின் 100 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
ஓசி குவாட்டர் கேட்ட இளைஞர்... மறுத்ததால் கடைக்குள் வைத்து பூட்டினார்... பின்னர் மாட்டினார்!